Pandavar illam: புத்தம் புது சீரியல்: பாண்டவர் இல்லம்...அஞ்சு பேர் இருப்பாங்களா?

சென்னை: சன் டிவியில் புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்ப முறையான அறிவிப்பும் ப்ரோமோவும் வெளியிட்டு இருக்காங்க. சீரியலோட பேரு பாண்டவர் வீடு. எந்த சீரியல் முடியப்போகுதுன்னு தெரியலை.

பாண்டவர் வீடு மிக விரைவில்னுதான் ப்ரோமோவே ஒளிபரப்பறாங்களே தவிர நேரம் எதையும் அறிவிக்கவில்லை. இப்போதைக்கு எந்த சீரியல் முடியப் போகுதுன்னும் தெரியலை.

காலை 9 மணிக்கு ஜெய் ஹனுமான் சீரியலில் ஆரம்பிச்சு இரவு 10:30 மணிக்கு வள்ளி வரை சீரியல் ஒளிபரப்பாகிட்டு வருது. இதில் எதை முடித்து,அந்த நேரத்தில் பாண்டவர் வீடு சீரியலை ஆரம்பிக்க போறாங்களோ தெரியலை.

ஜவ்வு மாதிரி முடியாது

ஜவ்வு மாதிரி முடியாது

எப்போதும் பேய் அல்லது திகில் தொடர்களை அதிகம் ஜவ்வு மாதிரி நீட்டிக்க முடியாது. அப்படிப்பார்த்தால் அருந்ததி சீரியல் இந்த வாரத்துடன் முடிய வேண்டும்..காரணம் இதுக்கு மேல அருந்ததியில் கதையை இழுப்பதற்கு வேலை இல்லை.அதனால்,அருந்ததியை இந்த வாரத்தோடு முடித்து, அந்த நேரத்தை பாண்டவர் வீடு சீரியலுக்கு ஒதுக்கலாம்.

ராடான் மின்னலே

ராடான் மின்னலே

ராதிகா வேறு அறிவிப்பு விட்டு இருக்கார்.இனி எல்லா சேனல்களிலும் ராடான் தயாரிப்புக்களை பார்த்து மகிழலாம் என்று.அதனால், எதற்கு இவருக்கு ஸ்லாட் ஒதுக்க வேண்டும் என்று, மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் ராடான் சீரியலான மின்னலே சீரியலை இந்த வாரத்துடன் முடிக்க வாய்ப்புக்கள் உள்ளன. சீரியல் போக்கும் முடியும் தருவாயில் இருப்பது போல கதைப் போகுது.

முடியுமா வள்ளி

முடியுமா வள்ளி

இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் வள்ளி சீரியல் கடந்த ஆறு வ்ருடங்களுக்கும் மேலாக ஒளிபராகிட்டு வந்துச்சு. மதிய நேரத்தில் முதலில் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கான நேரத்தை கடந்த சில வருடத்துக்கு முன்பே இரவு நேரத்துக்கு ஒதுக்கித் தந்து இருந்தது. வள்ளி சீரியல் முடிந்து, அந்த நேரத்தை பாண்டவர் வீடு சீரியலுக்கு ஒதுக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

பாண்டவர் வீடு

பாண்டவர் வீடு

பாண்டவர் வீடு சீரியலில் நாயகியில் கண்மணியாக நடிக்கும் பாப்ரி கோஷ் நடிக்கிறார். வயலில் கிராமத்து கதை மாதிரி பாண்டவர் வீடு ப்ரோமோ எடுத்து இருக்கிறார்கள். வயல் வெளியை பார்த்தாலே கிராமத்து கதையாக இருக்குமோ என்கிற ஆவல் அதிகமாகுது. கொஞ்சம் ஏமாத்தாம அக்மார்க் கிராமத்து கதை போன்ற சீரியலை கொடுத்தால், இந்த தருணத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X