சன் டிவி மகாபாரதம்: பாண்டவர்கள்– கௌரவர்களின் மோதல் தொடங்கியது…

By Mayura Akilan

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மகாபாரதம் தொடர் 25 வது எபிசோடுகளை எட்டியுள்ளது.

பாலகர்களாக இருந்த பாண்டவர்களும், கவுரவர்களும் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டனர். சிறுவர்களாக இருந்தபோதிருந்தே இருவர்களுக்குமிடையே ஏற்பட்டிருந்த போட்டி மனப்பான்மை அவர்கள் வளர வளர போட்டி, பொறாமையும் வளர்ந்து விடுகிறது.

Mahabharatha

பாண்டவர்கள் அறிமுகம்

மகாபாரதம் தொடரின் 25 வது எபிசோடில் பாண்டவர்கள், கவுரவர்கள் பெரியவர்களாவிட்டனர். நேற்றைய தினம் அறிமுகக் காட்சி ஒளிபரப்பானது.

துரியோதனன் - பீமன்

துரியோதனனும், பீமனும் ஆக்ரோஸமாக மோதிக்கொண்டனர். இதைக்கண்டு பயந்த பீஷ்மர் அவர்களின் சண்டையை நிறுத்துமாறு துரோனோச்சாரியரிடம் கூறவே அவர், அஸ்வத்தாமனிடம் கட்டளையிடுகிறார். குருவின் மீது ஆணையிட்டு இருவரின் சண்டையை நிறுத்துகிறார் அஸ்வத்தாமன்.

அர்ஜூனனின் வித்தை

பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் அர்ஜூனன் தனது வித்தையை காண்பிக்கிறான். அப்போது அந்த கூட்டத்தில் கர்ணனின் வருகிறான்.

மயங்கிய குந்தி

கவசகுண்டலம் அணிந்த அந்த இளைஞனை பார்க்கும் போது குந்தி தேவிக்கு தனது மகனின் நினைவு வருகிறது. உடனே மயக்க நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

போட்டியிட தயாரா?

வில் வித்தையில் அர்ஜூனன் மட்டும் சிறந்தவனல்ல. தன்னுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பளிக்க கோருகிறான் கர்ணன். அதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக என்பதை அடுத்த வாரம் காணலாம்.

பிரம்மாண்ட தயாரிப்பு

அர்ஜுனனின் வில் வித்தை சாகசங்கள், பீமன், துரியோதனனுக்குமான சண்டைக் காட்சிகள், மற்றும் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளதாக இயக்குநர் சசிகுமார் கூறியுள்ளார்.

200 எபிசோடுகள்

இந்தியில் வந்த 'மகாபாரதம்' வெறும் 56 எபிசோட்தான். இதனால் அதிகமாக கதை சொல்லி இருக்க மாட்டார்கள். மகாபாரதத்தில் இருந்து சொல்லப்படாத புதிய கதைகளையும் சொல்லுகிறோம். இது 200 எபிசோடை தாண்டும், இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறார் சசிகுமார்.

சன் டி.வியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் 'மகாபாரதம்' தொடரில் 'பூவிலங்கு' மோகன், அமித் பார்கவ், ஓ.ஏ.கே சுந்தர், இளவரசன், மனோகர், தேவிப்பிரியா, ஐஸ்வர்யா, பூஜா உட்பட பலர் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X