For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தம்பியை தலைமுழுகிய மூர்த்தி… பேரதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் !

  |

  சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

  கண்ணன், ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள், இருவரையும் திருமண கோலத்தில் பார்த்த மூர்த்தி அவர்களை தலை முழுகுகிறார்.

  நாங்க வேற மாதிரி பாடலுக்கு இறங்கி குத்திய 'வேம்புலி’…. வைரலாகும் வீடியோ !நாங்க வேற மாதிரி பாடலுக்கு இறங்கி குத்திய 'வேம்புலி’…. வைரலாகும் வீடியோ !

  இனி இந்த குடும்பத்திற்கும் உனக்கும் ஒட்டும் இல்லை , உறவும் இல்லை என்று ஆக்ரோஷமாக கத்துகிறார்.

  பாண்டியன் ஸ்டோர்ஸ்

  பாண்டியன் ஸ்டோர்ஸ்

  பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் குடும்பம் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

  கூட்டுக்குடும்பம்

  கூட்டுக்குடும்பம்

  மற்ற சீரியல்களை போல், வில்லி, எந்நேரமும் அழுகை, போலீஸ், கொலை, பழுவாங்குவது என்று இல்லாமல், சாதாரண ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்குமோ அதே போல் எதார்த்தமான கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

  ஏராளமான ரசிகர்கள்

  ஏராளமான ரசிகர்கள்

  வானத்தைப்போல, ஆனந்தம் , எங்கள் அண்ணன், போன்ற திரைப்படங்களை போல் இந்த சீரியல் முழுக்க, முழுக்க அண்ணன் தம்பிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், ஹேமா சதிஷ், காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

  கோயிலில் திருமணம்

  கோயிலில் திருமணம்

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை என முதல் 3 பேரும் திருமணமாகி தங்கள் அம்மாவுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். கடைசி தம்பி கண்ணன் உறவுக்கார பெண் ஐஸ்வர்யாவை காதலிக்கிறார். பிரசாந்துடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதால், ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் கண்ணனை திருமணம் செய்துக் கொள்கிறார் .

  ரகசிய திருமணம்

  ரகசிய திருமணம்

  இவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளும் தகவல்கள் தெரிந்ததும், அந்த குடும்பமே நிலைகுலைந்து போய், சோகத்தில் மூழ்கி உள்ளது. ஜீவா, கதிர் இருவரும், எப்படியாவது கண்ணன், ஐஸ்வர்யா திருமணத்தை நிறுத்திவிடவேண்டும் என்று பல இடங்களில் அவர்களைத் தேடி அலைந்தனர். அதற்குள் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

  தம்பியை தலைமுழுகிய மூர்த்தி

  தம்பியை தலைமுழுகிய மூர்த்தி

  ஒட்டுமொத்த ஊரும் திரண்டு இருந்த நேரத்தில் காரிலிருந்து மாலையும் கழுத்துமாக இறங்குகிறான் தம்பி கண்ணன். இதைப்பார்த்து அதிர்ந்து அந்த குடும்பமே பேரதிர்ச்சி அடைந்தது. திருமண கோலத்தில் இவர்கள் இருவரையும் பார்த்த மூர்த்தி கோவத்தின் எல்லைக்கே சென்று இனி நீ என் தம்பி இல்லை நான் அண்ணணும் இல்லை என்று, தலையில் தண்ணீரை ஊற்றி, தலை முழுகினார். இனி இந்த வீட்டுக்கும் உனக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று ஆக்ரோஷமாக கத்தினார். இனி இந்த வீட்டில் காலடி எடுத்து வைச்சே நான் உயிரோடவே இருக்க மாட்டேன் கூறி விட்டு சென்று விடுகிறார். இதனை பார்த்த தனம் மனம் உடைந்து அழுது புலம்புகிறார். கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதபடி அங்கிருந்து செல்கின்றனர்.

  Sembaruthi Shabana Aryan Engagement | Madhan Reshma, Bakkiyalakshmi, Abhi Tailor
  அடுத்தது என்ன

  அடுத்தது என்ன

  நேற்று பரப்பாக வெளியான இந்த எபிசோட் அனைவரையும் கண் கலங்க வைத்துவிட்டது. ஏதோ நம் குடும்பத்தில் ஒரு சோகம் நிகழ்ந்தது போல அனைவரும் கண்ணீருடன் பார்த்தனர். இனி என்ன ஆகும், கண்ணனை மன்னித்து ஏற்றுக்கொள்வாரா மூர்த்தி, கண்ணன், ஐஸ்வர்யா எங்கே செல்வார்கள் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் வரும் வாரங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாக உள்ளது.

  English summary
  The story revolves around the unity among four brothers. Moorthy younger brother Kannan was married to Aishwarya. pandian stores family in shocked.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X