அட...நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரா இது...இப்படி அசத்துறாரே
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் குமரன் தியாகராஜன். குடும்ப சென்டிமென்ட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் ,மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக நடித்திருப்பார்.
முல்லை உடனான கதிரின் ரொமான்ஸ் காட்சிகள் பலரின் ஃபேவரைட். அதிலும் ஆரம்பத்தில் முல்லை கேரக்டரில் நடித்த மறைந்த நடிகை விஜே சித்ராவுடனான குமரனின் காதல் காட்சிகள் இந்த சீரியலின் டிஆர்பி.,யை அதிரடியாக உயர வைத்தது.

கோபம், ரொமான்ஸ், சென்டிமென்ட், காமெடி என இந்த சீரியலில் கலக்கி வருகிறார். சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் சோஷியல் மீடியாவில் யாருக்கும் தெரியாத தனது திறமைகளை வெளிக்காட்டி அனைவரையும் அசத்தி வருகிறார் குமரன்.
மிக அருமையாக பாடல் பாடி இவர் வெளியிட்டுள்ள வீடியோ, சோஷியல் மீடியாவில் பிரபலமாக வலம் வருகிறது. குமரன் பகிர்ந்த வீடியோவில், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் வரும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை மிக அழகாக, உருக்கமாக பாடி உள்ளார். இவருக்கு இவ்வளவு அழகாக பாடும் திறமை உள்ளதா என நெட்டிசன்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
அவர் இது போல் பாடல் வீடியோ வெளியிடுவது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் சங்கமம் படத்தில் வரும் முதல் முறை பாடலையும் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான மிக சிறந்த பாடல்களில் ஒன்றாக இந்த பாடலும் கருதப்படுகிறது.
பாட்டு மட்டுமல்ல மிக அசால்ட்டாக, அற்புதமாக நடனமும் ஆடுகிறார் குமரன். தனது நண்பர்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் குமரன். லேட்டஸ்ட்டாக நேற்று, குஷி படத்தில் வரும் மேக்க்கரீனா பாடலுக்கு செம ஸ்மார்ட்டாக ஸ்டெப் போட்டு மிரட்டி உள்ளார் குமரன். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











