Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும்...
- News
சுதந்திர தினம்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி வீடியோ.. புதிய சாதனை!
- Finance
ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு.. ஊழியர்கள் ஷாக்..!
- Automobiles
ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!
- Sports
சக வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த ஷிகர் தவான்.. முதல் குறியே கேஎல் ராகுல்.. கேப்டன் பதவியால் கோபம்?
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. கேன்சர் பயத்தை கொடுத்த சம்பவம்!
சென்னை : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ஹேமா.
இயல்பான இவரது கேரக்டர் அந்த சீரியலை பார்க்கும் அனைவரின் விருப்பத்திற்குரிய கேரக்டராக உள்ளது.
இவர் கொரோனா டைமில் யூடியூப் சேனல் ஒன்றை துவக்கி ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்க போகும் அதிர்ச்சி சம்பவம்...என்ன நடக்க போகுதோ?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்
விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. இந்தத் தொடரில் கூட்டுக் குடும்பமாக செயல்பட்டுவரும் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து இயக்குநர் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறார். தற்போது கதிர் -முல்லை வீட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் மூத்த அண்ணன் மூர்த்தியும் மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சூடு பிடித்துள்ள சீரியல்
இதையடுத்து தற்போது இந்த சீரியல் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் இந்த சம்பவம் குறித்து ரசிகர்களிடையே சேனல், ரெவ்யூ எடுத்தது. இதில் கதிர் -முல்லை விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்றே அனைத்து தரப்பு ரசிகர்களும் தெரிவித்தனர். அந்த வகையில் இந்தத் தொடர் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

குட்டி அண்ணி மீனா
இந்தத் தொடரில் குட்டி அண்ணியாக மீனா என்ற கேரக்டரில் நடித்துள்ளவர் நடிகை ஹேமா. இவர் இதற்கு முன்னதாக சில சீரியல்கள் மற்றும் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவரது இயல்பான நடிப்பு அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஹேமாவின் யூடியூப் சேனல்
இந்தத் தொடர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ள நிலையில், கொரோனா லாக்டவுன் சமயத்தில் இவர் தனியாக ஒரு யூடியூப் சேனலை துவக்கினார். அதில் பல வீடியோக்களை இவர் பகிர்ந்த நிலையில், அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் தற்போது அவர் தனது ஆபரேஷன் குறித்து பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கேன்சர் குறித்த பயம்
எனக்கு ஆபரேஷன் என்ற தலைப்பில் இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கழுத்துக்கு கீழே 4 சென்டிமீட்டர் அளவில் கட்டி இருந்ததாகவும் தொடர்ந்து கேன்சர் கட்டியாக இருக்குமோ என்ற பயம் இருந்ததாகவும் மருத்துவரின் ஆலோசனை பெற்று பின்பு அந்தக் கட்டியை ஆபரேஷன் மூலம் அகற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீடியோ பதிவு
முன்னதாக டெஸ்ட் எடுத்தது, ஆபரேஷன் செய்தது, ஆபரேஷன் தியேட்டருக்கு சென்றது என அனைத்து விஷயங்களையும் அவர் பதிவு செய்திருந்தார். இந்த ஆபரேஷனின்போது அவரது தங்கையே அவருடன் இருந்து அவரை கவனித்துக் கொண்டுள்ளார். தற்போது தான் நலமடைந்துள்ளதையும் ஹேமா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அட்வைஸ் கொடுத்த ஹேமா
பெண்கள் தங்களது உடலில் காணப்படும் கட்டியை அலட்சியம் செய்யக்கூடாது என்றும் உடனுக்குடன் பரிசோதனை செய்துக் கொண்டு உரிய சிகிச்சை செய்து கொள்வது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இத்தகைய கட்டிகள் சில சமயங்களில் கேன்சராக மாற வாய்ப்புள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.