Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- News
இது மோசடி! ஏமாறாதீங்க.. மின் இணைப்பு தொடர்பான மெசெஜ் பற்றி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அட்வைஸ்!
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Finance
இனி உங்க இஷ்டத்துக்கு வீடியோ போட முடியாது.. சமூக வலைத்தள வீடியோவுக்கு கடிவாளம்!
- Automobiles
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- Technology
இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மூர்த்தி.. என்ன அப்படி ஒரு பிளான் இருக்கா.. தெளிவுப்படுத்துவாரா?
சென்னை : பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் டிவியின் முக்கிய தொடராக ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
இந்த தொடரின் டிஆர்பி தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நம்பர் ஒன் இடத்தை நோக்கி தொடர் நடைபோட்டு வருகிறது.
தொடரில் அடுத்தடுத்து ட்விஸ்ட்கள் காணப்படுகின்றன. தற்போது மூர்த்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Veetla
Vishesham
Review:
50
வயதில்
அம்மாவாகும்
ஊர்வசி..
வீட்ல
விசேஷம்
விமர்சனம்
இதோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்
விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பாக்கியலட்சுமி உள்ள நிலையில், அடுத்தடுத்து பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் உள்ளன. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறது. தற்போது மிகவும் முக்கியமான கட்டத்தில் தொடர் காணப்படுகிறது.

கோபியின் காதலை கண்டுபிடித்த மூர்த்தி
சமீபத்தில் பாக்கியலட்சுமி தொடருடன் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சங்கமத்தில் ஈடுபட்டது. மூர்த்தி மற்றும் தனம் இருவரும் இணைந்து கோபியின் ராதிகாவுடனான காதலை கண்டுபிடித்து அவரிடமே அதை கூறுகின்றனர். இதனால் கதையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்ட மூர்த்தி
இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் திருப்பம் காணப்படுகிறது. தொடரில் கதிரும் முல்லையும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு நெஞ்சுவலி காரணமாக மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மூர்த்தி கேரக்டரில் நடித்துவரும் ஸ்டாலின் முத்து சம்பந்தப்பட்ட இந்த பரபரப்பான எபிசோட்கள் தொடர்ந்து ரசிகர்களை பரபரப்பாக வைத்து வருகிறது.

புதிய தொடரில் ஸ்டாலின் முத்து
இந்நிலையில் மூர்த்தி இந்தத் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரான பச்சைக்கிளி தொடரில் அவர் தற்போது கமிட்டாகியுள்ளார். அரண்மனை கிளி நடிகை மோனிஷா நடிக்கவுள்ள இந்த தொடரில் அவருக்கு அண்ணனாக ஸ்டாலின் முத்து நடிக்கவுள்ளார்.

தொடரிலிருந்து விலகுகிறாரா ஸ்டாலின் முத்து?
இதையடுத்து அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகி விடுவாரோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. சமீப காலங்களில் வேறொரு தொடரில் கமிட்டாகும் சின்னத்திரை நடிகர்கள், தான் ஏற்கனவே நடித்துவரும் தொடரிலிருந்து விலகி வருவது தொடர்கிறது.

சந்தேகத்தை தீர்த்து வைப்பாரா ஸ்டாலின்?
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அனைவருக்கும் மூத்த அண்ணாகவே வாழ்ந்துவரும் ஸ்டாலின் முத்து, அந்த தொடரில் தொடர்வாரா என்று அவரது இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் அவர் இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.