Pandian Stores serial: திடீரென்று சீரியலை விட்டு விலகிய வெங்கட்..? இனி புது ஜீவா இவர்தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் ஹேமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழப்பமான பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் மீனா ஒரு நபரோடு புகைப்படம் ஒன்றை எடுத்து "இனி இவர்தான் ஜீவாவா?" என்று கேள்விக்குறியோடு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

தற்போது இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் ஜீவாவாக நடித்து வந்த வெங்கட் விலகி விட்டாரா? என்று கேள்விகள் குவிக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்ற தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது. காரணம் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முன்பு மாதிரி ரசிகர்களுக்கு சுவாரசியமாக கதை இல்லை என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.
அதுபோலவே அடுத்தடுத்து கதைக்களமும் நகர்ந்து வருகிறது. தனம் ஆசைப்பட்ட மாதிரியே தன்னுடைய புது வீட்டிற்கு குடும்பத்தோடு வந்தாச்சு. இனி தனத்தின் மார்பக புற்று நோய்க்கு ஆபரேஷன் செய்ததும் கதை முடிவுக்கு வந்துவிடும் என்று கருத்துக்கள் பரவி வந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் நடிக்கும் மீனா புது குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். அதாவது இந்த சீரியலில் "இனி இவர்தான் ஜீவா வா..?" என்று ஒரு நபரோடு புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்திருக்கிறார்.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவாவாக நடிக்கும் வெங்கட் கிழக்கு வாசல் சீரியலில் சண்முகமாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இரண்டு சீரியலில் ஒரே சேனலில் நடித்து வருவதால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறாரோ என்ற எண்ணமும் பலருக்கும் தோன்றியிருக்கிறது. ஏற்கனவே பல வருடங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் வெங்கட் திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகுவாரா? என்பது பலருடைய கேள்வி.
அதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் முடிவுக்கு வந்துவிடும் ஆனால் கிழக்கு வாசல் சீரியல் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. அதனால் அந்த சீரியல் பல வருடங்களாக போகும். அதனால் கூட பாண்டியன் ஸ்டோர் சீரியலில் விட்டு விலகி விட்டு கிழக்கு வாசல் சீரியலில் வெங்கட் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீனா சும்மா பரபரப்பு ஏற்படுத்துவதற்காக இப்படி செய்து கொண்டிருக்கிறாராகத்தான் இருக்க வேண்டும். ஹேமாவோடு இருக்கும் நபர் அங்கிருக்கும் தொழில்நுட்ப கலைஞர் தான். அவர் ஜீவா கேரக்டர் இல்லை என்றும் கமெண்டுகள் குவிகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











