மிஷினில் சிக்கிய கை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மருத்துவமனையில் அனுமதி.. பதறும் ரசிகர்கள்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த சீரியலான பாண்டிய ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகை தான் சாய் காயத்ரி. இவர் அந்த சீரியலில் ஐஸவர்யா என்ற ரோலில் நடித்து வந்தார்.தற்போது இவர் கையில் பெரிய கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.
மதுரையை சேர்ந்த சாய் காயத்ரி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். படிக்கும்போதே நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், பல சேனல்களில் தொகுப்பாளினியாக வாய்ப்புகளை தேடி வந்தார். அப்போது, ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது. ஜெயா டிவியில் இவர் தொகுத்து வழங்கிய கில்லாடி ராணி என்கிற ஸ்பெஷல் ஷோ ஓரளவிற்கு இவரை பிரபலப்படுத்தியது.

நடிகை சாய் காயத்ரி: அதன்பின், 2011ம் ஆண்டு விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக மாறினார். அந்த கதாபாத்திரம் சாய் காயத்ரிக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்த சீரியலைத் தொடர்ந்து, சிவா மனசுல சக்தி,ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்தார். இதையடுத்து . பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி சாய் காயத்ரி விலகினார்.அதன் பிறகு விஜய் டிவியில் நீ நான் காதல் என்ற சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்திரி, இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை அஸ்ரிதா இந்த சீரியலில் நடித்து வருகிறார். உடல்நிலை சரியில்லாததால் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை சாய் காயத்ரி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

திடீர் விபத்து: நடிகை சாய் காயத்ரி, நடிகையாக மட்டுமில்லாமல், ஒரு தொழில்முணைவோராகவும் இருக்கிறார். இவர் சொந்தமாக சாய் சீக்ரெட் என்கிற பெயரில் ஆர்கானிக் காஸ்மெடிக் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில்,நேற்று, காஸ்மெடிக் பொருள் தயாரிப்புக்காக வேலை செய்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கை மிஷினில் கை சிக்கியுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி: இதனால், கையில் பெரிய கட்டுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.அதில், நேற்று எதிர்பாராத விதமான ஒரு சின்ன விபத்து நடந்துவிட்டது. தற்போது மருத்துவமனையில் இருக்கிறேன். இதில் இருந்து குணமடைய இரண்டு வாரம் ஆகும் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள்,விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











