மீனா பேர்லதான் வீடு ரெஜிஸ்டர் ஆகுதா.. இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது ட்விஸ்ட்!

சென்னை : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் என இந்தத் தொடர் சிறப்பான கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கூட்டுக் குடும்பத்தின் இனிமை, அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வது என இந்தத் தொடர் எப்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா என முன்னணி சீரியலின் வரிசையில் காணப்படுகிறது. இந்தத் தொடரின் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்கள் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. 4 அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள், இவர்களுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை இந்த் தொடர் வழங்கி வருகிறது.

கூட்டுக் குடும்பத்தின் இனிமை

கூட்டுக் குடும்பத்தின் இனிமை

பாண்டியன் ஸ்டோர்ஸ் என கடையை நடத்திவரும் இவர்கள், சந்திக்கும் பிரச்சினைகள், எந்தப் பிரச்சினை வந்தாலும் யாரும் யாரையும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது என கூட்டுக் குடும்பத்தில் இத்தனை இனிமை உள்ளதா என பார்க்கும் ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறது பாண்டியன் ஸ்டோஸ்.

 மூர்த்தி -தனம் கேரக்டர்கள்

மூர்த்தி -தனம் கேரக்டர்கள்

இந்தக் கதையில் மூத்த அண்ணன் அண்ணியின் தியாகங்கள் மிகவும் முக்கியமான கவனத்தை பெற்றுள்ளது. மூர்த்தி -தனம் என்ற அந்தக் கேரக்டரில் தங்களின் தாய் தந்தையின் பாசத்தை மற்ற சகோதரர்கள் உணர்கின்றனர். இவ்வாறு செல்லும் இந்தத் தொடரில் பெரிய ட்விஸ்டாக கதிர் மற்றும் முல்லை இருவரும் சூழ்நிலை காரணமாக வீட்டை விட்டு சென்றது பார்க்கப்பட்டது.

வீட்டை விற்கும் முடிவு

வீட்டை விற்கும் முடிவு

தற்போது சூழ்நிலை காரணமாக தங்களின் பாரம்பரிய வீட்டை விற்கும் முடிவை இவர்கள் எடுத்துள்ள நிலையில், மீனாவின் அப்பாவே இவர்களது வீட்டை வாங்க முன்வருகிறார். இதற்கு முதலில் வீட்டின் மற்ற உறுப்பினர்கள் தயங்குகின்றனர். இதனிடையே ரிஜிஸ்டர் ஆபீசிற்கு இவர்கள் அனைவரும் ரெஜிஸ்ட்ரேஷனுக்காக வரும் நிலையில் அங்கு எபிசோடின் முக்கியமான ட்விஸ்ட் காணப்படுகிறது.

மீனா பெயரில் ரெஜிஸ்ட்ரேஷன்

மீனா பெயரில் ரெஜிஸ்ட்ரேஷன்

இந்த வீட்டை மீனாவின் அப்பா வாங்கவுள்ள நிலையில், அவர் பெயரில்தான் வீடு ரெஜிஸ்டர் ஆகவுள்ளதாக அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், அங்கு சாட்சி கையெழுத்து போடுவதற்காக தன்னுடைய மகளை வர சொல்லிவிட்டு வீட்டை மீனாவின் பெயரிலேயே ரெஜிஸ்டர் செய்ய முற்படுகிறார் அவரது அப்பா.

திகைப்பில் குடும்பத்தினர்

திகைப்பில் குடும்பத்தினர்

இந்த ட்விஸ்ட் மற்றவர்கள் அனைவரையும் திகைக்க வைக்கிறது. ஏன் மீனாவே திகைத்துத்தான் போகிறார். இப்படியாக இந்த வார ப்ரமோவில் காணப்படுகிறது. இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் எந்தமாதிரியான முடிவை எடுப்பார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X