For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சென்டிமென்ட்டை பிழிந்து நம்பர் ஒன் இடத்தை தட்டிச் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்

  |

  சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், குடும்ப உறவுகள், அண்ணன் - தம்பி பாசம் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த சீரியலின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

  Pandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா?

  மதம் மாறியவர்கள் ஜாதியை பயன்படுத்த சட்டத்திலேயே இடம் கிடையாது.. இயக்குநர் மோகன் ஜி பரபரப்பு பேட்டி!மதம் மாறியவர்கள் ஜாதியை பயன்படுத்த சட்டத்திலேயே இடம் கிடையாது.. இயக்குநர் மோகன் ஜி பரபரப்பு பேட்டி!

  2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் 550 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கமான மெகா சீரியல்களை போல் ஆள் கடத்தல், கூலிப்படையின் அடித்தடி, சதி வேலைகள், பழிவாங்குதல் போன்றவை இல்லாமல் யதார்த்தனமான குடும்ப கதை என்பதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.

  கலகலப்பான குடும்ப கதை

  கலகலப்பான குடும்ப கதை

  மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை, கடைசி தம்பி கண்ணன் என கலகலப்பான குடும்ப கதை. ஆரம்பத்தில் விஜே சித்ரா நடித்த முல்லை கேரக்டரை மையப்படுத்தியே கதை நகர்ந்தது. அவர் இறந்த பிறகு மூர்த்தி - தனம் பிளாஷ்பேக், திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு தனம் கர்ப்பமானது என மகிழ்ச்சி, சென்டிமென்ட, எமோஷனல் என கலந்து போய் கொண்டிருந்தது.

  அம்மாவை பார்க்க முடியாத கண்ணன்

  அம்மாவை பார்க்க முடியாத கண்ணன்

  கடைசி தம்பியான கண்ணன், உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறான். இதனால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கண்ணன், அதனால் உடல்நிலை பாதிக்கப்படும் அம்மாவை பார்க்க வேண்டும் என அண்ணன்களிடம் கெஞ்சுகிறான். ஆனால் மூர்த்தி பிடிவாதமாக மறுத்து விடுகிறார். அம்மா லட்சுமியும், கண்ணனை பார்க்க விரும்பவில்லை என சொல்லி விடுகிறார்.

  லட்சுமி அம்மாவின் மரணம்

  லட்சுமி அம்மாவின் மரணம்

  இப்படி சென்டிமென்ட் கலந்து போய் கொண்டிருந்த சீரியலில் திடீர் திருப்பமாக லட்சுமி அம்மா இறப்பது போன்ற சீன் காட்டப்படுகிறது. அந்த நேரம் பார்த்து வேலை விஷயமாக திருச்சி செல்கிறான் கண்ணன். செல்போனையும் மறந்து வைத்து விட்டு செல்கிறான். இதனால் அம்மா இறந்தது கூட அவருக்கு தெரியாமல் போய் விடுகிறது. அத்தனை காரியங்களும் முடிந்த பிறகு ஊர் திரும்பும் கண்ணன் கதறி அழுகிறான், வீட்டிற்கே சென்று அண்ணன்களிடம் சண்டை போடுகிறான்.

  செம விறுவிறுப்பு

  செம விறுவிறுப்பு

  ஒரு பக்கம் லட்சுமி அம்மாவை இழந்த சோகத்தில் கதறி அழுகும் குடும்ப உறவுகள், மற்றொரு புறம் நிஜத்தில் நடப்பதை போன்றே அனைத்து சடங்குகளும் மிக கச்சிதமாக நடத்தப்படுவது. மற்றொரு புறம் அம்மாவின் முகத்தை கடைசியாக பார்க்க கண்ணன் வருவாரா, அண்ணன்கள் அவரை சேர்ப்பார்களா, மீண்டும் குடும்பத்துடன் சேருவானா கண்ணன் என பல விறுவிறுப்புக்களை கொண்டதாக கடந்த வாரம் முழுவதும் துக்க வீட்டு, அழுகை காட்சிகள் இடம்பெற்றன.

  டிஆர்பி.,யில் முந்திய பாண்டியன் ஸ்டோர்ஸ்

  டிஆர்பி.,யில் முந்திய பாண்டியன் ஸ்டோர்ஸ்

  சென்டிமென்ட், அடுத்தடுத்த எதிர்பாராத ட்விஸ்ட்கள் நிறைந்திருப்பதால் டிஆர்பி.,யில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதில் இரட்டை குழந்தை விவகாரம், பாரதி- கண்ணம்மா சேர்வார்களா என்ற எதிர்பார்ப்பு காரணமாக பாரதி கண்ணம்மா சீரில் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் சென்டிமென்ட்டை பிழிந்து, கண்ணீர் கடலில் ரசிகர்களை மிதக்க விட்டு டிஆர்பி.,யில் முதலிடத்தை பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

  நகர்புறத்திலே இந்த ரேட்டிங்கா

  நகர்புறத்திலே இந்த ரேட்டிங்கா

  இதுவரை வெளியான டிவி ரோட்டிங் அடிப்படையில் நகர் புறங்களில் மட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 13.2 ரேட்டிங்கை பெற்று நம்பர் ஒன் இடத்திற்கு வந்துள்ளது. நகர்ப்புறங்களிலேயே இந்த ரேட்டிங் என்றால் கிராமப்புறங்களில் எத்தனை புள்ளிகளை இந்த சீரியல் பெற்றிருக்குமோ தெரியவில்லை.

  இதை தான் மக்கள் விரும்புறாங்களா

  இதை தான் மக்கள் விரும்புறாங்களா

  அழுது வடியும் காட்சிகளால் தான் டிவி சீரியல்களை பலர் வெறுப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அழுகை, சென்டிமென்ட் நிறைந்ததாக சீரியலை கொண்டு சென்றாலும் மக்கள் பார்ப்பார்கள் என்பதை பாண்டியன் சீரியல் காட்டி விட்டது. சென்டிமென்ட், அழுகை காட்சிகளாக இருந்தாலும் யதார்த்தமாக இருந்தால் மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள். யதார்த்தத்தை மீறிய நம்ப முடியாத அபத்தங்களை மக்கள் ஏற்பதில்லை என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் அழுத்தமாக நிரூபித்து விட்டது.

  வாழ்த்தும் ரசிகர்கள்

  வாழ்த்தும் ரசிகர்கள்

  தங்களின் ஃபேரைட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளதற்கு சீரியல் டீமுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த பெருமை முழுவதும் லட்சுமி அம்மாவை தான் போய் சேரும் என அதிகமானவர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர் ரேட்டிங்கிற்காக என்ன வேண்டுமானும் பண்ணுவீங்களா என கோபமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

  English summary
  Pandian stores serial scored 13.2 tvr in rural area and spotted number one position in tamil tv serials list. after a long time pandian stores return to top position. in last few months bharathi kannamma occupied top rating.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X