Pandian Stores: சம்பளம் விஷயத்தில் கறார் காட்டிய சுஜிதா.. சேனல் தரப்பில் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகை சுஜிதா திடீரென்று தான் இந்த சீரியலை விட்டு விலகுவதாக கூறியதாக தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால் கடைசியில் அவருக்கு சீரியல் தரப்பினரிடம் இருந்து வேறு விதமாக அவருடைய மனதை மாற்றியதாக கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை தாண்டி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நான்கு அண்ணன் தம்பியின் கதைகளை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியலில் புதுப்புது பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.
அதில் எல்லாம் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் எப்படி மீண்டு வெளியே வருகிறது என்பது பற்றி தான் இந்த கதை போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் கடந்த சில மாதங்களாக இந்த சீரியலின் கதை ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்று பலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் மேலும் சில பிரச்சனைகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த சீரியல் தொடர்ச்சியாக 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இவருக்கு பதில் இவர் என்று பல கேரக்டர்கள் மாறிவிட்டனர். ஆனால் ஒரு சில கேரக்டர்கள் தான் தொடர்ச்சியாக ஆரம்பத்தில் இருந்தவர்கள் இப்போது வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் தனலட்சுமி கேரக்டரில் நடிக்கும் சுஜிதா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நடிகர் அஜித்துக்கு தந்தையாகவும் நடித்திருக்கிறார். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் குழந்தையாக தொடங்கிய இவருடைய பயணம் இப்போது வரைக்கும் பல சீரியல்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு தான் விலகப் போவதாக சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தாரார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியான சீரியல் தரப்பினர் ஐந்து வருடங்களாக இவரே தனமாக நடித்துவிட்டு அதுவும் தனம் தான் இந்த சீரியலில் முக்கிய கேரக்டராக இருக்கிறார். இதிலிருந்து இவர் திடீரென்று விலகினால் சீரியலின் சுவாரசியம் குறைந்து விடும் என்று இவருக்கு மேலும் சம்பளத்தை உயர்த்தி இந்த சீரியலில் நடிக்க வைத்திருப்பதாக தகவல்கள் வலம் வருகிறது.
ஏற்கனவே தனம் ஆசைப்பட்ட மாதிரி புது வீடு கட்டி அனைவரும் ஒரே வீட்டில் குடி பெயர்ந்து விட்டனர். அதனால் இனி சீரியல் முடிக்கப்படுமா? அல்லது அடுத்ததாக புது பிரச்சனையை தொடங்கப் போகிறார்களா? என்றும் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவடைந்தாலும் அதை தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











