தனத்துக்கு குழந்தை பிறந்துடுச்சு...கேக் வெட்டி கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம்

சென்னை : விஜய் டிவி.,யில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் ப்ரைம் டைம் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப சென்டிமென்ட், கரெக்டான நடிகர் - நடிகைகள் தேர்வு ஆகியவற்றால் இந்த சீரியல் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த சீரியல்களில் நடிப்பவர்கள் யதார்த்தமான நடிப்பு, பேச்சுவழக்கு ஆகியவற்றை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் கேரக்டர் பெயரை சொன்னாலே தெரியும் அளவிற்கு பதிந்து விட்டனர். இந்த சீரியலில் நடிக்கும் அனைவருக்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது சோஷியல் மீடியாவில்.

மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை ஆகியோரின் கடைசி தம்பி கண்ணன். அண்ணன் - தம்பி பாசத்திற்கு உதாரணமாக இருக்கும் இந்த குடும்பத்தில் கடைசி தம்பியான கண்ணன், உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை காதலித்து, குடும்பத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான் கண்ணன்.

 முதலிடம் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்

முதலிடம் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்

இதனால் மனமுடைந்த மூர்த்தி சகோதரர்களின் அம்மாவான லட்சுமி அம்மா உயிரிழக்கிறார். கடைசியாக தன் அம்மாவின் முகத்தை பார்க்க கண்ணன் வருவாரா என்ற சஸ்பென்ஸ், செம த்ரில்லிங்காக கொண்டு செல்லப்பட்டதால் சமீபத்தில் டிஆர்பி.,யில் முதலிடத்தை பிடித்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

தனத்திற்கு உதவும் கண்ணன்

தனத்திற்கு உதவும் கண்ணன்

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு எதிர் வீட்டிற்கே குடி வருகிறார்கள் கண்ணனும் ஐஸ்வர்யாவும். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனத்திற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அப்போது வீதிக்கு ஓடி வரும் தனத்தின் அம்மா, எதிரில் வரும் கண்ணனை உதவிக்கு கூப்பிடுகிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஓடி வந்து தனத்திற்கு உதவுகிறார்கள். தனத்தை தானே தூக்கிச் செல்கிறான் கண்ணன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டம்

இதைத் தொடர்ந்து தனத்திற்கு குழந்தை பிறக்கிறது. பல மாதங்களாக தனத்தின் கர்ப்பம், பிரசவம் என சீரியலை ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் தனத்திற்கு குழந்தை பிறப்பதான எபிசோட்டின் ஷுட்டிங் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதை புதிய குழந்தையின் அறிமுகத்துடன், கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டீம்.

வாழ்த்தும் ரசிகர்கள்

வாழ்த்தும் ரசிகர்கள்

இந்த ஃபோட்டோ இணையத்தில் வெளியானதை அடுத்து, ஏராளமானோர் வாழ்த்தும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். பலர் ஒரு வழியாக குழந்தை பிறந்து விட்டதா. அடுத்தது கண்ணனை ஏற்றுக் கொள்ளும் சென்டிமென்ட் சீன் தானே என கேட்டுள்ளனர். இதனால் சீரியல் முடிய போகிறதா என பலர் கவலையுடன் கேட்டுள்ளனர்.

இனி வில்லிகள் ஆட்டமா

இனி வில்லிகள் ஆட்டமா

எப்படியும் குழந்தை பிறந்த சீனை வைத்தே இன்னும் சில வாரங்கள் சீரியலை ஓட்டி விடுவார்கள். கண்ணனை ஏற்கும் மனநிலைக்கு மூர்த்தி வரும் போது, கஸ்தூரியும் மல்லியும் வில்லிகளாக மாறி தங்களின் வேலைகளை காட்டுவார்கள். எப்படியும் இப்போதைக்கு சீரியலை முடிக்க மாட்டார்கள். புதிதாக ஏதாவது ட்விஸ்ட் வைப்பார்கள் என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X