பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா… திடீரென தூக்க இதுதான் காரணமா?
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ஷீலா, லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
திடீரென லட்சுமி கதாபாத்திரம் உயிரிழந்துவிட்டதாக காட்டப்பட்டு அந்த கதாபாத்திரம் திடீரென தூக்கப்பட்டதற்கு, மிகப்பெரிய காரணம் இருப்பதாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் குடும்பம் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

கூட்டுக்குடும்பம்
மற்ற சீரியல்களை போல், வில்லி, எந்நேரமும் அழுகை, போலீஸ், கொலை, பழிவாங்குவது என்று இல்லாமை, சாதாரண ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்குமோ அதே போல் எதார்த்தமான கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏராளமான ரசிகர்கள்
இந்த சீரியல் முழுக்க, முழுக்க அண்ணன் தம்பிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம், ஹேமா சதிஷ், காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

ஒதுக்கிவைக்கப்பட்ட கண்ணன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை என முதல் 3 பேரும் திருமணமாகி தங்கள் அம்மாவுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். கடைசி தம்பி கண்ணன் உறவுக்கார பெண் ஐஸ்வர்யாவை காதலித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டார். இதனால், கண்ணன் அந்த வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.

லட்சுமி உயிரிழந்தார்
கண்ணன் செய்த காரியத்தை நினைத்து மனம் வருந்திய லட்சுமி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டநிலையில் உயிரிழந்தார். கண்ணன் அம்மாவின் உடலை பார்க்ககூட முடியாத பாவி ஆகிவிட்டேன் என்று கதறி அழுத எபிசோட் சமீபத்தில் ஒளிபரப்பானது.

பரபரப்பான பேச்சு
இந்த சீரியல் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஷீலா, லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திடீரென இந்த கதாபாத்திரம் உயிரிழந்துவிட்டதாக காட்டப்பட்டு அந்த கதாபாத்திரம் தூக்கப்பட்டதற்கு மிகப்பெரிய காரணம் இருப்பதாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுதான் காரணம்
மகனின் மேல் உள்ள கோபத்தை அம்மாகிட்டக் காட்டி இருக்காங்க என்கிறார்கள். அதாவது ஷீலாவின் மகனும் நடிகருமான விக்ராந்த்தை பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்த கொள்ள கூப்பிட்டதாகவும், அவரும் ஓகே சொல்லிட்டாராம். ஆனால், திடீர்னு அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் ஷோவுக்குப் போய்விட்டராம். என்னடா... நம்மகிட்ட வர்றேன்னு சொல்லிட்டு திடீர்னு அந்த சேனலுக்குப் போயிட்டாரேங்கிற ஆத்திரத்துலதான் இந்த அம்மாவை இறந்து போனதா காட்டிட்டாங்க என்று பரபரப்பாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











