புதுயுகம் தொலைக்காட்சியில் சுட சுட ‘பேப்பர் தோசை’
தினசரி செய்தித்தாள்களை வாசிப்பவர்களுக்கு செய்திகளையே சுவையானதாக்கித் தருகிறது பேப்பர் தோசை.
புதுயுகம் தொலைக்காட்சியில், நாள்தோறும் காலை நேரத்திலும் இரவு உணவாகவும் செய்திகளை சுவைப்பட பரிமாறி வருகிறது பேப்பர்தோசை நிகழ்ச்சி
அன்றாடம் செய்தித்தாள்களில் வெளியாகும் செய்திகளை நய்யாண்டி செய்கிறது இந்த பேப்பர் தோசை.

நாளிதழ்களில் செய்திகள்
நாளிதழ்களும், செய்தி தொலைக்காட்சிகளும். நான்கு திசைக்களிலிருந்தும் திரட்டப்படும் செய்திகளை செய்திகளாகவே கொடுத்து வருகின்றன.

நையாண்டி செய்திகள்
பேப்பர்தோசையோ அச்செய்திகளுக்கு பின்னால் உள்ள கொண்டிருக்கும் அடிப்படைக் கோணங்களை கேலியுடன் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

கேலிச்சித்திரங்கள்
அன்றாட செய்திகளை தொகுத்து வரும் பாடல் மூலம் செய்திமாவை ஊற்றும் இந்நிகழ்ச்சி கேலிச்சித்திரங்கள், செய்தி அரட்டை, 'பய' டேட்டா,

சொல்றதுக்கு ஒண்ணுமில்ல
மெய்யாலுமே பொய், சொல்றதுக்கு ஒண்ணுமில்ல, கருத்துப்படம், என பல்சுவைகளில் மக்களுக்கு செய்திகளை படையலிட்டு வரும் இந்நிகழ்ச்சியை பூபாளம் பிரகதீஸ்வரனும், அருளும் தொகுத்து வழங்குகின்றனர்.

தினசரி சுட சுட
புதுயுகம் தொலைக்காட்சியில் இரவு 10.00 மணிக்கும், காலை 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது பேப்பர்தோசை


Click it and Unblock the Notifications











