பிக்பாஸ் விஜய் சேதுபதியால் கவுரவம் கூடுகிறது.. நெகிழ்ந்துபோன பார்த்திபன்

சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருந்த சூழலில் மகாராஜா படத்தில் கடைசியாக ஹீரோவாக நடித்தார்.

சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டியவர் விஜய் சேதுபதி. பிறகு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டடித்து விஜய் சேதுபதியின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழலில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வந்தனர். அவர்களின் ஒரே சாய்ஸாக இருந்தது விஜய் சேதுபதிதான்.

parthiban vijay sethupathi bigg boss 8 8


வரிசை ஹிட்: 2010 ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு வரை விஜய் சேதுபதியின் கிராஃப் உச்சத்தில் இருந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வெரைட்டியை காண்பித்தார் சேது. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.

வில்லன்: நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லனாகவும் நடித்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்த படங்களிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸிலும் நடித்து அட்டகாசம் செய்திருந்தார். ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் கவனம் ஈர்த்த அவர் கடைசியாக ஹிந்தியில் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்தார்.

மகாராஜா விஜய் சேதுபதி: தமிழில் அவர் கடைசியாக நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற்து.முக்கியமாக நித்திலனின் திரைக்கதையை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடியது. அதேபோல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகும் படத்துக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக விஜய் சேதுபதி ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். மிஷ்கின் இயக்க; கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

பிக்பாஸ்: சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை அவர் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் தொடக்க நாள் விழாவிலேயே பலரையும் வைத்து செய்துவிட்டார் சேது. அவர் தனது பேச்சில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் எழுதிய ஒரு கவிதையையும் குறிப்பிட்டார். இந்நிலையில் பார்த்திபன் அதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

பார்த்திபன் பதிவு: அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் எப்போதோ எங்கேயோ கூறியதை கூர்ய கவனக்கார நண்பர்-நினைவுக் கூறும் போது அக்கவிதையின் கவுரவம் கூடுகிறது!!! தனிமையின் எக்ஸ்ரேவான எனக்கதன் சுயம் அறிந்ததால் …. தீவு என்றால் நாற்புறமும் நீரன்றி வேறு துணையற்ற தனிமைக் கூடு! அதன் சோகமறிந்ததால் 'தனியான தீவுக்கு துணையாகப் போய்விடலாமா?’ என யோசிப்பதாய் எழுதியிருந்தேன்.ஏதோ இல்லாமலே இருக்கிறேன் BBயில்” என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X