Bigg Boss tamil 9: பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. கம்ருதீனுடன் ஜோடியாக வந்த பார்வதி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலே இருந்தே டாக் ஆப் தி ஷோவாக இருந்தவர் பார்வதி தான். யார் என்ன சொன்னாலும், அதற்கு ஏடாகூடமாக பதில் சொல்லி சர்ச்சையை கிளப்பி விடுவார். சர்ச்சையை கிளப்புவது மட்டுமல்லாமல் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டு, அனைவரும் மூட்டிக்கொண்டு இருக்கும் போது, இவர் மட்டும் தன்னுடைய வேலையை பார்க்க சென்று விடுவார். இதுதான் பிக் பாஸ் வீட்டில் பார்வதியின் தனி ஸ்டைலாகவே இருந்தது.

பார்வதி ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார் என போட்டியாளர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை சொன்னாலும் எதை பற்றியும் கவலைப்படாமல், தன்னுடைய விளையாட்டிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார் பார்வதி. ஒரு கட்டத்தில் பார்வதிக்கும் கம்ருதீனுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி விட்டது. இதனால், இருவரும் அவ்வப்போது, ரொமான்ஸ் செய்வதும், செல்லமாக சண்டைப்போட்டுக்கொள்வதுமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் ரொமான்சுக்கு தடையாக மைக் இருந்ததால், மைக்கை கழட்டிவிட்டு பேசினார்கள். பொருத்து பொருத்து பார்த்த பிக் பாஸ், மைக்கை கழட்டிவிட்டு பேசியதற்காக ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் தண்டனை கொடுத்தார். அப்போதும் பார்வதி அசராமல் அனைவருக்கும் பதிலடி கொடுத்து வந்தார்.

bigg boss tamil 9 VJ Parvathi Kamruddin VJ
Photo Credit:

ரெட் கார்ட்: டிக்கெட் டூ பினாலே கார் டாஸ்கின் போது காருக்குள் இருந்து சாண்ட்ரா எட்டி உதைத்து வெளியில் தள்ளினார். இதனால், பார்வதிக்கும், அதற்கு உடந்தையாக இருந்த கம்ருதீனுக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்தது சரிதான். ஆனால், கம்ருதீன் பாவம் என இணையத்தில் அனைவரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். நாட்கள் செல்ல செல்ல சாண்ட்ராவிற்கு உண்மையிலேயே பேனிக் அட்டாக் வரவில்லை, அவர் நடித்தார், வேண்டுமென்றே பார்வதி, கம்ருதீனை டார்கெட் செய்து நடித்து வெளியில் அனுப்பிவிட்டார் என்ற கருத்து மேலோங்கியதால் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்தது. இணையத்தில் இருவரையும் கண்டபடி திட்டியவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.

கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்: இதையடுத்து, தற்போது பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருமே பிக் பாஸ் கிராண்ட் பினாலேவில் ஜோடியாக கலந்து கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவருக்கும் கிராண்ட் பினாலேவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. கம்ருதீன் கலந்து கொள்வதாக கூறிவிட்டார். பார்வதி மறுத்துவிட்டார் என கூறப்பட்ட நிலையில், தற்போது பார்வதியும் கிராண்ட் பினாலேவில் கலந்து கொண்டு இருக்கிறார். இதைப்பார்த்த இணையவாசிகள், அதற்கு பருத்தி மூட்டை பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்றும், எதற்கு ரெட் கார்ட் நாடகம் என கண்டபடி கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: bigg boss tamil 9 vj parvathi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X