Bigg Boss: குளியலறை சர்ச்சை.. பாரு, கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுங்க.. கொந்தளிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் காதல் கன்டென்ட் கொடுத்து வருகின்றனர். கடந்த வாரம் இவர்கள் மைக்கை கழட்டி வைத்துவிட்டு பேசியதற்காக அனைவருக்கும் பிக் பாஸ் பனிஷ்மென்ட் கொடுத்து இருந்தார். இதற்கு எல்லாம் அடங்காத பார்வதி மற்றும் கம்ருதீன் நேற்று எல்லை மீறி நடந்து கொண்டனர். இந்த விஷயம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, படுக்கை அறையில் சபரி, சுபிக்ஷா, அரோரா அனைவரும் பாட்டு பாடிக்கொண்டே இருந்ததால் கடுப்பான சாண்ரா, அவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு, கார்டன் ஏரியாவிற்குள் சென்று படுத்தார். பலர் சமாதானப்படுத்தியும் அவர் உள்ளே வரவே இல்லை. இதனால் நேற்றைய எபிசோடில் படுக்கை அறையில் இருந்து சபரி, சுபிக்ஷா, அரோரா, வினோத், விக்ரம், கனி, பார்வதி, கம்ருதீன் என அனைவரும் கார்டன் ஏரியாவில் படுக்கொண்டு, கார்டன் ஏரியாவில் ஒன்றாக பாட்டு பாடி கலாட்டா செய்து கொண்டு இருந்தனர். வெகுநேரம் ஆகிவிட்டதால், சில பேர் கார்டன் ஏரியாவில் படுத்துக்கொண்டனர். சில பேர் மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று படுத்துக்கொண்டனர். அப்போது, பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் குளியல் அறைக்குள் சென்று நீண்ட நேரமாக அங்கேயே இருந்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 9: நீண்ட நேரமாக இருவரும் குளியல் அறையில் இருந்து வெளியே வராததால் பிக் பாஸ் நாய் குரைக்கும் ஒலியை ஒலிக்கச் செய்து அவர்களுக்கு வார்னிங் கொடுத்தார். இந்த சத்தத்தை கேட்டு முதலில் கமருதீன் குளியலறையை விட்டு வெளியே வருகிறார். அடுத்து பார்வதி வருகிறார். இதையடுத்து இரவு முழுவதும் தூங்காமல் இருந்த பார்வதி காலையில் கம்ருதீனிடம், வீட்டில் என் அண்ணன், அம்மா மற்றும் குடும்பத்தினர் இதைப் பார்த்தால் என்ன நினைப்பார்க என கண்ணீர் விட்டு அழுகிறார்.அப்போது கம்ருதீன், நீ கவலைப்படாதே பாரு, இன்னும் 30 நாள் தான் இருக்கு நீ விளையாட்டில் கவனத்தை செலுத்தி விளையாடு, நான் உன் வீட்டிற்கு வந்து பேசுகிறேன் என்று பார்வதியிடம் சத்தியம் செய்து அவரை சமாதானப்படுத்துகிறார்.
ரெட் கார்ட் கொடுங்க: இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதைப்பார்த்த இணையவாசிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே இது போன்ற ஒரு அசிங்கம் நடந்ததே இல்லை. இது போன்ற அசிங்கம் எல்லாம் இந்தி பிக் பாஸில் தான் நடந்து இருக்கு, விதிமுறைகளை மீறிய இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும். விஜய் சேதுபதி வழக்கம் போல, இது அவர்களின் பர்சனல் என்று விட்டு விடாமல், இருவரையும் கண்டிக்க வேண்டும் என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











