பூவரசுவின் எண்ணம் நிறைவேறுமா??

By Mayura Akilan

சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், 'பாசமலர்.'

அண்ணன்-தங்கை பாசத்தை மையப்படுத்திய இந்த தொடரில், சொந்த பந்தங்களுக்கிடையேயான பாசப்போராட்டமும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.

நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் ஆறும், வயலும் நிறைந்த பகுதிகளில் இந்த சீரியல் எடுத்துள்ளனர்.

பூவரசு – தாமரை

பூவரசு – தாமரை

தங்கை தாமரையின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவளுக்கு அத்தை மகனையே மாப்பிள்ளையாக முடிவு செய்கிறான் அண்ணன் பூவரசு.

தாமரையின் திருமணம்

தாமரையின் திருமணம்

25 பவுன் நகை போடவேண்டும் என்று அத்தை கூறவே உயிரை பணயம் வைத்து தயார் செய்கிறான். ஆனால் அது தங்கைக்கு தெரியவே உடனடியாக திருமணத்தை நிறுத்துகிறாள்.

பூவரசு அதிர்ச்சி

பூவரசு அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சியாகும் அண்ணன் திருமண முயற்சி தடை பட்ட பின்னணியை விசாரிக்கப் போக, கிடைத்த தகவல் அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தங்கை தன் மீது கொண்ட பாசம் தெரியவருகிறது.

இரண்டாவது தங்கை

இரண்டாவது தங்கை

ஏழ்மையை புரிந்து கொள்ளும் தாமரைக்கு நேர் எதிராக பூவரசுவின் இரண்டாவது தங்கை இருக்கிறாள். ஆடம்பரமாக திருமணம் செய்யவேண்டும் என்று அவள் அண்ணனிடம் கூறுகிறாள். அவளுக்கு செல்போன் விற்பனை கடைக்காரர் ஒருவருடன் மோதலில் ஆரம்பித்து நட்பில் வந்து முடிந்துள்ளது.

முதலாளி அழகு

முதலாளி அழகு

லேத் பட்டறை முதலாளி அழகு சொந்த மகனைப் போல பூவரசுவைப் பார்த்துக் கொள்கிறார். இது அவரின் சொந்த மகனுக்கு பிடிக்காமல் போய் தகராறு ஏற்படுகிறது.

அண்ணனாக ஸ்டாலின்

அண்ணனாக ஸ்டாலின்

தங்கையின் திருமணத்தை அண்ணன் பூவரசு என்ன முடிவெடுத்தான் என்பது தொடர்ந்து வரும் பரபரப்பு எபிசோடுகள். அண்ணனாக ஸ்டாலின், தங்கையாக பிருத்திகா நடிக்கிறார்கள்.

டைட்டில் பாடல்

டைட்டில் பாடல்

‘‘இந்த தொடரில் வரும் ‘என்ன தவம் செய்தேனோ, என் தாய் நீ தானோ' என்ற டைட்டில் பாடல் சின்னத்திரை நேயர்கள் வட்டாரத்தில் பிரபலமாகி விட்டது. சினிமாவில் சிவாஜி-சாவித்திரி அண்ணன்-தங்கையாக நடித்து இன்றளவும் பேசப்படும் பாசமலரைப் போல், சின்னத்திரையில் இந்தப் பாசமலரும் நேயர்கள் மனதில் வாசம் வீசும்'' என்கிறார், தொடரின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.

பிரபல நடிகர்கள்

பிரபல நடிகர்கள்

இந்த தொடரில் லட்சுமி, கங்கா, சவுந்தர், அழகு, கே.நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள். ‘மதுரை டூ தேனி' படத்தில் நாயகனாக நடித்த குருஅரவிந்த் இந்த தொடரில் இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.

சரவணன் மீனாட்சி இயக்குநர்

சரவணன் மீனாட்சி இயக்குநர்

மதுரை, சரவணன் மீனாட்சி தொடர்களை இயக்கிய அழகர் தற்போது பாசமலர் சீரியலை இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை: அமல்ராஜ். வசனம்: தர்மலிங்கம். பாடல்: யுகபாரதி. இசை: ராஜ்குமார் ராஜமாணிக்கம். ஒளிப்பதிவு: கோபால். தயாரிப்பு: ஹோம் மூவி மேக்கர்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X