Naam Iruvar Namakku Iruvar Serial: பாவம் இந்த நிலை பெண்களுக்கு கொடுமைதான்!
சென்னை; விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விளையாட்டாக போவது போல ரொம்ப சீரியஸான விஷயத்தை சொல்கிறார்கள். இரண்டு பிள்ளைகள் பிறந்தும் இப்படியா மண வாழக்கை அமைய வேண்டும்!
குஸ்தி வாத்தியாருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருத்தன் அவர் நண்பரிடம் வளர்ந்து டாக்டராகி விடறான்.இன்னொருவன் மாயன் என்பவன் குஸ்தி வாத்தியாரிடம் வளர்ந்து வெட்டிப் பயல் என்று பெயரெடுக்கிறான்.
இந்த வெட்டிப் பயல் மாயன் டாக்டர் அரவிந்துடன் கல்யாணம் நடக்க இருந்த தேவியை மிரட்டி கல்யாணம் செய்துக்கறான். அரவிந்துக்கு தாமரை என்கிற சுமாராக படித்த பெண்ணை, அவளது தாய் மாமன் மிரட்டி கட்டி வைக்கிறான்.

இந்த கல்யாணம்
விளையாட்டு போல இந்த கல்யாணம் நடந்து முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது. இரு தம்பதியுமே விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் அரவிந்த் மணம் மாறி தாமரை மீது காதல்கொண்ட, விவாகரத்து கேஸை வாபஸ் வாங்கிவிட நினைக்கிறான். ஆனால், தேவி வீட்டில் அவள் நன்கு படித்தவள் என்பதால்,அவளை குழப்பி திசை திருப்பி விவாகரத்துதான் முடிவு என்கிற நிலைமைக்கு கொண்டு வந்துடறாங்க.

அப்பாவுக்கு உடம்பு
அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு காரணம் சொல்லி, முதல் கல்யாண நாளை கல்யாணம் போலவே கொண்டாட ஆசைப்படறார். மாயனின் மனைவி தேவியை அழைக்கப் போக, அவள் சாதாரணமாக கொண்டாட போறாங்கன்னு நினைச்சுகிட்டு மாயனுடன் வர, அங்கு நிஜ கல்யாணம் போலவே ஒவ்வொன்றும் நடக்கிறது. தாமரையும், அரவிந்தும் சந்தோஷமாக இருந்தாலும், தேவிக்கு இதில் சந்தோசம் இல்லை.

என் வீட்டில்
தேவி தனியாக நின்றுகொண்டு அழ ஆரம்பித்து விடுகிறாள் கண்ணீர் மல்க நிற்கும் தேவியை பார்த்த மாயன் எதுக்குங்க அழறீங்கன்னு கேட்கறான். என்ன பேசறே நீ..எங்க வீட்டில் விவகாரத்துன்னு முடிவில் இருக்ககோம்.நானும் அவங்களை அப்படித்தான் நம்ப வச்சு இருக்கேன். ஆனால், மூணு நாளில் விவாகரத்து வர போகுது. ஆனா, இங்கே நான் இன்னொரு தடவை உனக்கு மாலை மாத்தி, மோதிரமும் போட்டுக்கிட்டு இருக்கேன்.

உன் பக்கமே
உன்னை விட்டு விளக்கிப் போனாலும் என்னை உன் பக்கமே இழுக்கற மாதிரி சூழ்நிலை எனக்கு அமையுது. இந்த மாதிரி நிலை எந்த ஒரு பெண்ணுக்கும் வரவே கூடாது. இன்னும் என்ன நடிப்பெல்லாம் உன் கூட சேர்ந்து நான் நடிக்கணும் சொல்லுடான்னு கண்ணீர் விடறா. ஏங்க நடிப்பு தானேங்க.. எதுக்கு இப்படி கண்ணீர் விடறீங்க. இப்போ நடிங்க.. மூணு நாள் கழிச்சு புடிக்கலேன்னா டாடா காமிச்சுட்டு போயிகிட்டே இருங்க... நடிக்க வந்தாச்சு.. கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்றான். முதலிரவு சம்பிரதாயம் எல்லாம் வேற செய்யறாங்க.
என்னதான் இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வர கூடாதுதான்!


Click it and Unblock the Notifications











