சன் டிவியில் 10 மணிக் கதைகள்...

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் '10 மணி கதைகள்' தொடரில் முதல் கதையாக இடம் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது, 'எதிர் வீட்டுப் பையன்'. வி.சி.ரவி இந்த தொடரை இயக்குகிறார்.
தொடர்ந்து மாதம் ஒரு இயக்குனரின் படைப்பு சின்னத்திரையை அலங்கரிக்கும். சின்னத்திரையில் இது புதுமுயற்சி என்ற விதத்தில், தொடர்கள் மீதான எதிர்பார்ப்பும் நேயர்களிடையே அதிகரித்திருக்கிறது.
மாதம் ஒரு கதைத்தொடர் என்ற வரிசையில் ஒரு தொடர் அந்த மாதத்துடன் நிறைவு பெற்று விடும். இதனால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இந்த தொடர் ஏற்படுத்தும் என்கின்றனர் தொடர் தயாரிப்பாளர்கள்.
அந்த வகையில் இந்த தொடர், ஜனவரி மாதம் 18 எபிசோடுடன் முடிவுக்கு வந்து விடும். பிப்ரவரி மாதம் அஸ்வின் பாஸ்கர் இயக்கும் 18 எபிசோடுகள் கொண்ட புதிய தொடர் இடம் பெறுகிறது.
இந்த குறுந்தொடரினை திரு பிக்சர்ஸ் திருமுருகன் தயாரிக்க, யுகபாரதி பாடல் எழுதியுள்ளார். சஞ்சீவ் ரத்தன் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











