Don't Miss!
- News
பொன்னையன் சொன்னது..அதை விடுங்க அரசியல்ல சகஜம்..பெருசா எடுத்துக்கலை..சட்டென சொன்ன அண்ணாமலை
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Finance
புதிய வருமான வரிக்கு பலே வரவேற்பு.. 66% பேர் மாறுவார்கள்.. சொல்வது யார் தெரியுமா..?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எல்லாரும் இருந்தாலும் பாவனிக்குத்தான் முதல்ல கேக்.. ரசிகர்களை கவர்ந்த அமீரின் அசத்தல் அன்பு!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளனர் அமீர் மற்றும் பாவனி.
இந்தப் போட்டியில் 3வது வெற்றியாளராக பாவனியும் 5வது வெற்றியாளராக அமீரும் வெற்றி பெற்றனர்.
இவர்கள் இருவருக்குள்ளும் அந்த போட்டியின்போது சிறப்பான நட்பு உருவானது. தொடர்ந்து பாவனியிடம் தன்னுடைய காதலை சொன்னார் அமீர்.
கையில்
சுத்தியல்..கொலைவெறியுடன்
அலையும்
விஷ்ணு
விஷால்..
மோகன்தாஸ்
க்ளிம்ப்ஸ்
வீடியோ!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதலிலேயே போட்டியாளராக பங்கேற்றார் நடிகை பாவனி. இவர் முன்னதாக சின்னத்தம்பி உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களில் நடித்துவந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து வெளிப்படையாக பேசி அனைவரது அனுதாபங்களையும் சம்பாதித்தார்.

பாவனியிடம் காதல் சொன்ன அமீர்
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் சுற்றில் பங்கேற்ற நடன இயக்குநர் அமீர், தன்னுடைய காதலை பாவனியிடம் தெரிவித்தார். ஆனால் இந்த காதலை ஏற்றுக் கொள்ளாமல் தற்போதுவரை போக்குக் காட்டி வருகிறார் பாவனி. ஆனால் இவர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றி வருகின்றனர்.

ஐ லவ் யூ சொன்ன பாவனி
இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமீரின் பிறந்தநாளையொட்டி பாவனி தனது சமூக வலைதளப்பதிவில் அவர்போன்ற ஒரு நபரை தான் பார்த்ததில்லை என்றும் ஐ லவ் யூடா என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நெருக்கமான புகைப்படம்
இந்தப் பதிவில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அமீர் மீதான தனது காதலை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே அமீரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் பாவனி பங்கேற்றுள்ளார்.

பாவனிக்கு கேக் ஊட்டிய அமீர்
தற்போது இதன் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனது பிறந்தநாளையொட்டி நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டும் அமீர், உடனடியாக பாவனிக்கு கேக்கை ஊட்டி விடுகிறார். தன்னுடைய நண்பர்கள் பலர் இருந்தாலும் பாவனிக்குத்தான் அவர் முக்கியத்துவம் தருகிறார்.

பாவனியின் ரியாக்ஷன்
உடனே மற்றவர்களுக்கு கொடுக்கும்படி பாவனி ரியாக்ட் செய்வதும் அழகாக உள்ளது. ஆனால், அமீர் அவரை வற்புறுத்தி கேக்கை ஊட்டி விடுகிறார். இந்த வீடியோவில் அவர்களது ஜோடி மிகவும் அழகாக காணப்படுகிறது. இந்த வீடியோவை ரசிகர்களை அதிகமாக லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.

காதலாக மாறுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அதில் காதலை பகிர்ந்த அமீர் என ரசிகர்களின் அதிகமான வரவேற்பை பெற்றது இந்த ஜோடி. அமீரின் காதலை பாவனி ஏற்க வேண்டும் என்பதே ஏராளமான ரசிகர்களின் விருப்பமாக காணப்படுகிறது. இருக்கும் இருப்பை பார்த்தால் விரைவில் இவர்கள் அன்பு காதலாக மாறும் என எதிர்பார்க்கலாம்.