ஷகிலாவின் இரண்டாவது மகள் பவித்ராவா.. அதிர்ச்சியான ரசிகர்கள்

By Velsamy

சென்னை: விஜய் டிவியின் நிகழ்ச்சியில் வாராவாரம் ஒருவர் கதறி அழுவதை மையப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் இந்த வாரம் ரசிகர்களின் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கும் பவித்ரா கதறி அழுததை பார்த்து அதிர்ச்சியாகி விட்டனர் ரசிகர்கள்.

ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக பவித்ராவுக்கும் ஷகிலா விற்கும் உள்ள உறவுமுறை கேள்விப்பட்டதும் பெரும் ஷாக்காகி இருந்கின்றனர்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் பெரும் டிஆர்பி ரேட் அதிகமாக இருக்கிறது. பல டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களை புதுசு புதுசாக அறிமுகப்படுத்தினாலும் விஜய் டிவியை அடிச்சிக்கவே முடியவில்லை அதுவும் தற்போது ரொம்பவே பாப்புலர் ஆக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை யாரும் மறந்து விட முடியாது.

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

ஏனென்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதற்கு அடிமைகளாக மாறிவிட்டனர். பொதுவாக சீரியல்கள் என்றாலே பலருக்கு எரிச்சலூட்டும் அளவில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பார்கள் .ஆனால் தற்போது சின்னத்திரையிலும் இந்த மாதிரி ஜாலியான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றதால் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

வேற லெவல் வளர்ச்சி

வேற லெவல் வளர்ச்சி

அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகைகளும் வேற லெவலில் வளர்ச்சி அடைந்து விட்டார்கள் .இவர்களில் பலர் ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தாலும் அதில் கிடைக்காத பேரும் புகழும் இந்த நிகழ்ச்சியில் இவர்களுக்கு கிடைத்துவிட்டது .அதுவும் பவித்ராவிற்கு சொல்லவே வேண்டாம். இதில் கலந்து கொள்ளும் கன்டஸ்டன்ட் கள் சிலர் கோமாளிகளாகவும் சிலர் குக்குகளாகவும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்

ஒரே குடும்பம் போல

ஒரே குடும்பம் போல

அதில் அனைவரும் செய்யும் சேட்டைக்கு அளவு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது .இவர்கள் அனைவருமே ஒரு குடும்பம் போல தான் வாழ்ந்து வருகின்றனர் .ஒரு நிகழ்ச்சியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர்கள் பலபேர் நண்பர்களாகவும் குடும்பமாகவும் மாறி விடுவது போல இந்த நிகழ்ச்சியிலும் அனைவரும் மாறி விட்டனர் .ஆனாலும் இந்த வார எபிசோட் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வாரமாக இருக்கிறது .

பவித்ராவின் அழுகை

பவித்ராவின் அழுகை

இதில் அனைத்து கண்டஸ்டன்களுடனும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் போது பவித்ராவிற்கு மட்டும் யாரும் கலந்து கொள்ள முடியவில்லை என அவர் கதறி அழுத வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .அவருடைய அழுகையை பார்த்ததும் பதறிப் போன அனைவரும் அவருக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

ஷகீலாவின் மகள்

ஷகீலாவின் மகள்

அதில் அதிரடியாக ஷகிலா என்னுடைய இரண்டாவது மகளை நான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துகிறேன் என பவித்ராவை கட்டிப்பிடித்து இவர்தான் எனது இரண்டாவது மகள் என அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதனை எதிர்பாராத அனைவரும் சந்தோஷத்தில் கைதட்டி ஆரவாரம் செய்து விடுகின்றனர் .பவித்ராவும் கூட தன்னுடைய அழுகையை மறந்து சிரித்துக் கொண்டிருக்கும் இந்த வீடியோவை பார்த்ததும் பல பேர் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர் .

எல்லோரும் இருக்காங்க

எல்லோரும் இருக்காங்க

அதுவும் ஷகிலாவும் அவருடைய மகள் மிலா மற்றும் பவித்ரா அனைவருமே கருப்பு கலரில் உடை அணிந்து இருப்பதால் இவர்களை கலாய்க்கும் கண்டஸ்டன்கள் அடுத்ததாக பவித்ராவிடம் அழாதே உனக்கு அம்மா அப்பா என அனைத்து உறவும் ஆக புகழ் இருக்கிறார் என கூறும் போது ஒருவர் மட்டும் அண்ணனாகவும் இருக்கிறார் என புகழ் மனதில் குண்டைத் தூக்கிப் போடுகிறார் .

பீல் செய்து கமெண்ட்

பீல் செய்து கமெண்ட்

அழுகையோடு வெளியான வீடியோவில் சந்தோசமான தருணத்தை ஏற்படுத்தி விட்டது என்னதான் இருந்தாலும் ரசிகர்களும் பவித்ராவின் அழுகையை பார்த்து பார்த்து பீல் பண்ணி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இந்த குக் வித் கோமாளி கொடுத்த சூப்பர் பிரபலங்களில் ஒருவர்தான் இந்த பவித்ரா. பவித்ராவை பலரும் பிடித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X