ராத்திரி நேரத்தில்.. பவித்ரா செய்த வேலை.. தூக்கத்தைத் தொலைத்த ரசிகர்கள்!
சென்னை: மஞ்சக் காட்டு மைனா வாக ஈரமான ரோஜாவே மலர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பல பேர் தூக்கத்தை தொலைத்து அதுவும் இந்த மாதிரி ராத்திரி நேரத்தில் இப்படி போஸ்ட் வெளியிடலாமா என்று புலம்பி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஈரமான ரோஜாவே சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்தில் போய்க் கொண்டிருந்தாலும் இந்த சீரியலில் எப்போதுமே மலராக நடிக்கும் பவித்ராவிற்கு வரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .
இவர் முதல் முறையாக இந்த சீரியலில் கதாநாயகியாக அவதாரம் எடுத்திருந்தாலும் பலபேர் மனதை கொள்ளை கொண்டு கலக்கல் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

கலக்கல்
இந்த சீரியலில் இவர் தான் கதாநாயகி என்று தெரிந்ததும் பலர் இந்த ரோல் செட் ஆகுமா என்று தான் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இவரை தவிர வேறு யாராலும் இந்த ரோலில் நடிக்க முடியாது எனும் நிலையில் வந்துவிட்டனர். திருமணமே ஆகாத நிலையில் இவர் இந்த சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் .

வயிற்றில் குழந்தையோடு
அதுவும் வயிற்றில் குழந்தையோடு இவர் தனது கணவரை நிரபராதி என்று நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கிறார் என்ற தைரியத்தை பார்த்து பல சீரியல் நடிகைகளுக்கும் சவால் விடும் அழகில் முதல் சீரியலில் இவர் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருப்பதால் சீரியல் ரசிகர்களும் அவரை ரொம்பவே எதிர்பார்த்து வருகின்றனர்.

நடிப்பில் துணிச்சல்
இவருடைய துணிச்சலான நடிப்பையும் காதல் ரொமான்ஸ்யும் பார்த்து பல பேர் இவருக்கு அடிமையாக மாறி விட்டனர். இதற்கு முன்னர் இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் முதல் முறையாக அறிமுகமாகி அதற்குப் பிறகு சரவணன் மீனாட்சி முதல் பகநிலவு ,கல்யாணம் முதல் காதல் வரை என பல சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொண்டிருந்தார் .

நடிப்பில் அழகு
ஆனால் இவருடைய அழகுக்கும் நடிப்புக்கும் கதாநாயகி கேரக்டர் தான் பொருத்தமாக இருக்கும் என்று தான் இந்த சீரியலில் இவரை நடிக்க கேட்டிருக்கிறார்கள் இவரும் கிடைத்த வாய்ப்பை விடாமல் ஓகே சொல்லிவிட்டார். அதனால்தான் தற்போது பல பேர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் இவருடைய போட்டோஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

கலக்கல் போட்டோஸ்
நடிகைகள் பல பேருக்கு பிடித்திருக்கும் போட்டோஷூட் மோகம் இவருக்கும் பிடித்திருக்கிறது. சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் போட்டோஷூட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார் .இவர் மாடலாக பணியாற்றுவதால் மாடலிங்கில் எடுக்கும் போட்டோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை பரவசப் படுத்துகிறார் .

மஞ்சள் தேவை
அந்த மாதிரிதான் தற்போது இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வலம் வந்து கொண்டிருக்கிறது. மஞ்சள் நிற உடையில் தேவதை போல வலம் வந்து கொண்டிருக்கும் இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரவு நேரத்தில் புகைப்படத்தை வெளியிட்டு பலபேர் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் .சிலர் கண் இமைக்க கூட முடியவில்லை கண் மூடினாலும் இந்த முகம் தான் கண் முன்னாடி வந்து கொண்டே இருக்கிறது என்று கவிதைகளை பொழிந்து வருகின்றனர். அந்த அளவிற்கு தன்னுடைய அழகான சிரிப்பாலும் மிரட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











