ட்ரென்ட்டாகும் கவிலியா ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்! #PeoplesFavouriteKaviliya
Recommended Video
சென்னை: டிவிட்டரில் கவிலியா என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இருவரும் காதலித்து வருகின்றனர்.
அவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் கவினுடனான காதலை லாஸ்லியா கைவிடுவதாக இல்லை.

கதறிய லாஸ்
நாளுக்கு நாள் அவர்களின் காதல் தீவிரமடைந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறியபோது கதறி அழுத லாஸ்லியா, நானும் வெளியே செல்கிறேன் என அடம் பிடித்தார்.

ஏக்கத்துடன் பார்த்த லாஸ்
கடைசியாக பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்தபோது கூட கவினை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் லாஸ்லியா. மேலும் கவினின் கைகளை பற்றி ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

காதலுக்கு ஆதரவு
லிவிங் ஏரியாவில் சோஃபாவில் அமர்ந்திருந்தபோது கூட கவினின் கைகளை பற்றிக்கொண்டே அமர்ந்திருந்தார். கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலை பார்வையாளர்கள் சிலர் விரும்பாவிட்டாலும், அவர்களின் காதலுக்கு கவின் மற்றும் லாஸ்லியா ஆர்மியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கவிலியா ஆர்மி
இருவருக்கும் தனித்தனி ஆர்மிகள் உள்ள போதும் அவர்களின் காதலுக்கு ஆதரவாக கவிலியா ஆர்மி என்ற ஆர்மியும் உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலில் முகென் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிலியா ட்ரென்ட்டிங்
கவிலியா ஃபேன்ஸால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லாஸ்லியா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் நொந்து போன கவிலியா ஃபேன்ஸ், முகெனுக்கு நீங்கள் கப்பை கொடுத்தால் என்ன என்றும் மக்களின் ஃபேவரைட் கவிலியா தான் என்று கூறி #PeoplesFavouriteKaviliya என்ற ஹேஷ்டேகை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
வைரல் போட்டோக்கள்
மேலும் கவினும் லாஸ்லியாவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் அவர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த படமே அவர்கள் எவ்வளவு தீவிரமாக காதலிக்கிறார்கள் என்பதை தெளிவாக கூறிவிடும் என்று கூறுகிறார் இவர்.
முதன் முதலில் பார்த்தேன்
பலரும் கவின் மற்றும் லாஸ்லியாவுக்காக காதல் பாடல்களையும் டெடிக்கேட் செய்து வருகின்றனர். ஆகா படத்திலிருந்து கவிலியாவுக்காக முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது பாடல் என்னுடைய தேர்வாக இருக்கும் என்று கூறி இந்த போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஒரு பாதி கதவு நீயடி
தாண்டவம் படத்திலிருந்து நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி.. ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி.. பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











