பெப்பர்ஸ் டிவி ‘முதல் நாள் முதல் காட்சி’
ரஜினி, கமல், விஜய், அஜீத் எந்த நடிகர் நடித்த படமென்றாலும் அதை முதல்நாள் முதல்காட்சி பார்க்கவேண்டும் என்றுதான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருப்பார்கள்.
வெள்ளிக்கிழமை புதுப்படங்கள் ரிலீஸ் ஆவதுதான் சமீபத்திய ட்ரெண்ட். தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம் என சிறப்பு தினங்களுக்காக திரைப்படங்கள் காத்திருப்பதில்லை.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதனை அடிப்படையாக வைத்து பெப்பெர்ஸ் டிவியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி கிழமை மாலை 7 .00க்கு முதல்நாள் முதல்காட்சி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ரசிகர்களின் மனநிலை
முதல்நாள் முதல்காட்சி பார்த்த ரசிகர்களின் மனநிலையை வெளிப்படுத்துகின்றனர்.

ஹாட் நியூஸ்
சுடச்சுட படங்களைப் பற்றி ரசிகர்களே விமர்ச்சிக்கின்றனர்.

பெப்பர்ஸ் டிவியில்
ரசிகர்களின் கருத்துக்களோடு பெப்பர்ஸ் டிவி குழுவினரும் புதிய படம் பற்றி கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

சினிமாவைப் பற்றி
முதல் நாள் முதல் காட்சி (" பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ " ) தொகுத்து வழங்குபவர் கிரிகோரி. ரசிகர்களுக்கு ஏற்ற ரசனையான சினிமா நிகழ்ச்சி என்கின்றனர் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications











