ஆகஸ்ட் 15ல் பிறந்தவர்களுக்கு பெப்பர்ஸ் டிவி செல்போன் தருகிறதாம்!

By Mayura Akilan

சுதந்திர தினத்தன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புவது வாடிக்கை.

பெப்பர்ஸ் டிவியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புவதோடு பரிசுகளும் அறிவித்துள்ளனர். பட்டிமன்றம், டிரம்ஸ் சிவமணி சிறப்பு நிகழ்ச்சியோடு நேயர்களை கவர பல நிகழ்ச்சிகளை அறிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 15ல் பிறந்தவர்களுக்கு செல்போன் பரிசு கொடுத்து கவுரப்படுத்த முடிவு செய்துள்ளது பெப்பர்ஸ் டிவி.

சுதந்திர தின பட்டிமன்றம்

சுதந்திர தின பட்டிமன்றம்

சுதந்திர தினத்தை ஒட்டி காலை 10 மணிமுதல் 11 மணிவரை சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. நமது சமூதாயத்தில் பெண்களின் சுதந்திரம் பற்றி விவாதித்துள்ளனர். திருச்சியில் நடைபெற்ற இந்த பட்டிமன்றம் சுதந்திர தினத்தன்று பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஆகஸ்ட் 15ல் பிறந்தவரா?

ஆகஸ்ட் 15ல் பிறந்தவரா?

ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர்களை பெப்பர்ஸ் டிவி கவுரவிக்க உள்ளது. உங்களுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 15 எனில் அவர்களை பெப்பர்ஸ் டிவி வாழ்த்துவதோடு மிக அழகான செல்போன் ஒன்றினையும் பரிசளிக்கிறது.

நீங்களும் உரையாடலாம்

நீங்களும் உரையாடலாம்

ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் அனைவரும் மதியம் 12 மணி முதல் 1 மணிவரை பெப்பர்ஸ் டிவியில் உரையாடலாம். வாழ்த்துக்களை பரிமாறலாம். அவர்களுக்கு பிடித்தமான பாடல் ஒளிபரப்பப்படும்.

அம்மாவும் ஆகஸ்ட் 15ம்

அம்மாவும் ஆகஸ்ட் 15ம்

டிரம்ஸ் சிவமணியின் அம்மாவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 15 ம் தேதி என்பதால் அதனை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள பள்ளி மைதான வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இது பெப்பர்ஸ் டிவியில் ஆகஸ்ட் 15ம் தேதி மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X