twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே!

    |

    சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துச்செல்வியை பார்த்தால் இப்போது பாவமாக இருப்பது போல கதை நகருது. அன்னக்காவடி வீட்டு பெண்ணாக இருந்தாலும், அரண்மனை வீட்டு பெண்ணாக இருந்தாலும் காதல் வந்தால் பொதுவானதுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

    சவுந்தர்யா மனதில் சின்னவரும், சின்னவர் மனதில் சவுந்தர்யாவும் இருப்பதை தெரிந்துகொண்ட முத்துச்செல்வி இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதுதான் நியாயம் என்று நினைத்து காய் நகர்த்துகிறாள்

    அதற்கான காட்சி அமைப்பு, வசனங்கள் மிக எளிமையாக நன்றாக இருக்கின்றன. கிராமத்தில் நாட்டாமை, மணியக்காரர் என்று டவுனில் இருந்தவர்களுக்கு தெரியாத விஷயங்களை சொல்லி இருப்பதும் நன்றாக இருக்கிறது.

    சின்னவர் கண்ணன்

    சின்னவர் கண்ணன்

    முத்துச்செல்விக்கு சின்னவராகவும், சவுந்தர்யாவுக்கு கண்ணன் மாமாவாகவும் சஞ்சீவ் நல்லா நடிச்சுருக்கார். நடுவில் கொஞ்சம் தொய்வடைந்து இருந்த கதை சவுந்தர்யாவுக்கு மின்சாரம் ஷாக் அடித்து அவள் உயிருக்கு போராடிய அந்த நிமிஷம் சூடு பிடித்துக் கொண்டது. இருந்தாலும் ஒரு ஏழை அப்பா இரண்டு பெண்களை பெற்றுவிட்டு, உலகம் தெரியாமல் அல்லாடுவதையும் கதையோட்டத்தில் காண்பித்துள்ளது உண்மையை உணர்த்துகிறது.

    மகள்கள் அப்பா

    மகள்கள் அப்பா

    இந்த உலகத்தில் ஆண்மகன் முதலில் உலகத்தை படிக்க வேண்டும். அப்போதுதான் தன்னை நம்பி வரும் பெண்ணை காப்பாற்றி, பிள்ளைகளை பெற்று நன்றாக வளர்க்க முடியும். உலகம் தெரியாத அப்பாவி என்று, ஒரு ஆண் மகன் மீது பரிதாப்படுவது நியாயம் ஆகாது. அதனால்தான், இரண்டு பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, அர்த்த ராத்திரியில் ஒரு லாரிக்காரனை நம்பி ஊரை விட்டுப் போகும் போது, வீரய்யா மீது எரிச்சல் வருகிறது. இவர் எப்படி, இரண்டு மகள்களை கரை சேர்ப்பார் என்று கேள்விக்குறி எழுகிறது.

    ஆரம்பம் ஆட்டம்

    ஆரம்பம் ஆட்டம்

    இப்போது கண்மணி சீரியல் முழுக்க முத்துச்செல்வியின் ஆட்டம் என்று கதைக்களம் நகர்வது ஜோராக இருக்கிறது. நியாயமும் அதுதான், இவள் விட்டுக் கொடுப்பது என்பது மட்டுமே கதைக்கு சிறந்ததாக இருக்க முடியும்.. என்னதான் விட்டுக் கொடுப்பதாக நினைத்தாலும், காதல் வலி எப்போதும் காதல் வலிதானே. அந்த நடிப்பிலும் இவள் மின்னுகிறாள். ஐயோ சவுந்தர்யாவுக்கு சின்னவரை விட்டுக் கொடுக்கப் போகிறாளே என்றாலும், அவனது அக்கா பொண்ணு சவுந்தர்யாவுக்குத்தானே என்று மனம் சமாதானம் அடைகிறது.

    எமோஷனல் கண்மணி

    எமோஷனல் கண்மணி

    இப்போது கண்மணி சீரியல் முழுவதும் குடும்ப எமோஷனில் பயணித்துக் கொண்டு இருப்பது... இதில் ஏழைக் குடும்பம் ஒன்று சிக்கிக் கொண்டு தள்ளாடுவது என்று கதையை நன்றாகவே இயக்குனர் கையாண்டு வருகிறார். தடுமாற்றம் இல்லாமல் கதை செல்வது, கதாசிரியர் மற்றும் இயக்குநரை பாராட்டத் தூண்டுவதாக இருக்கிறது. சீரியல் ஆர்வலர்களின் பாராட்டை பெற்று இருக்கிறது முத்துச்செல்வி கதாபாத்திரம். என்னதான் சவுந்தர்யா விட்டுக் கொடுக்கிறேன் என்று இத்தனை நாட்கள் கதையை நகர்த்தினாலும், சவுந்தர்யா மீது பரிதாபம் வரவில்லை. அதே காரியத்தை முத்துச்செல்வி செய்யும்போது அவள் மீது சீரியல் ஆர்வலர்களுக்கு பரிதாபம் வருகிறது.

    English summary
    Now that the kanmani are traveling throughout the serial family emotion ... The poor family is trapped in a story that the director is dealing with. The story goes on without hesitation and compliments the author and director.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X