Azhagu Serial:இதை எல்லாம் ரகசியமா செய்ய மாட்டீங்களா? ஊரே கேளு நாடே கேளுன்னா?
சென்னை:சன் டிவியின் அழகு சீரியலில் நண்பனின் விதவையான மனைவிக்கு வாழ்க்கை குடுக்கறான் ரவி. நண்பனுக்கு ஒரு கைக் குழந்தை.அந்த குழந்தையை அழகம்மை வீட்டில் எல்லாரும் நல்லாவே பார்த்துக்கறாங்க.
ஆனால் ,ரவிக்கு என்று சிறு வயதில் வளர்ந்தவள் பூர்ணா.சந்தர்ப்ப வசத்தால் மேற்கண்டபடி நடந்துவிட ரவியின் தம்பி மகேஷை பூர்ணா கல்யாணம் செய்துக்க நேரிட்டது.
மகேஷை பிடிக்காமல் இருந்த பூர்ணா இப்போது மனசு மாறி ,மகேஷை ரொம்ப லவ் பண்றா. இப்போது அவனது குழந்தையை தன் வயிற்றில் ஆசையாக சுமக்கிறாள். என்றாலும் அழகம்மை குடும்பத்தின் மீது இருக்கும் பகை தீரவில்லை.

ரவி நிறைய டிரஸ்
கோயிலுக்கு போகும்போது விபத்தில் எல்லாரும் மனம் கலங்கி இருக்க, இப்போது தனது கணவன் ரவி, சுதாவின் முதல் கணவனுக்கு பிறந்த குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடுவதை தானே மறந்த நிலையில் ரவி ஆர்வமாக இருப்பதைப் பார்த்து சுதாவுக்கு சந்தோஷம் நிரம்பி வழியுது. அவனின் கையை காதலுடன் பிடிச்சுக்கறா. இதை கவனித்த அழகம்மை,இன்னும் இவர்களுக்குள் இன்னும் நடக்கலை என்பதை தெரிஞ்சுக்கறாங்க.

எங்க கூட தூங்கட்டும்
சுதா...உன்கிட்ட பேசலாம்னுதான் வந்தேன்.உனக்கு இப்போதுதான் ரவி மேல ஒரு நம்பிக்கை வந்து இருக்கு. இது எல்லாபொண்ணுங்களுக்கும் வரும் சந்தேகம்தான்.இப்போவாவது ரவியை நம்பினீயே... இனிமே நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். அப்பு இனிமே எங்க கூட தூங்கட்டும்ன்னு சொல்லிட்டு தூக்கிட்டு போகும்போதே குழந்தைகிட்ட பேசிகிட்டு போறாங்க அழகம்மை.

சும்மா இருப்பாளா பூர்ணா
இதை தெரிஞ்சுக்கிட்டு,கேட்டுகிட்டே நிற்கும் பூர்ணா சும்மா இருப்பாளா. தீடீர்னு கீழே விழுந்த மாதிரி கத்த, அப்போதுதான் ஒருத்தரை ஒருத்தர் நெருங்க இருந்த ரவி, சுதா உட்பட எல்லாரும் எழுந்திரிச்சு ஒடி வர்றாங்க.அப்புறம் என்ன, அன்றைக்கு இருவருக்குள் நடக்க இருந்த நல்ல விஷயத்தை கெடுத்துட்டேன்னு சுதாவைப்பார்த்து விஷமமா சிரிக்கரா பூர்ணா.

ரகசியம் இருக்காதா?
ஆமாம், இப்படி படுக்கை அறை விஷயத்துல எல்லாரும் காதும் காதும் வச்ச மாதிரி நடந்துக்க மாட்டாங்க? இப்படியா வெளிப்படையா பேசி,இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் நடத்துவாங்க. அது சரி ,புருஷன் பொண்டாட்டி ரூமுக்குள்ள போனாலே தினம் இது நடக்கும் இல்லை நடக்குதுன்னு ஜட்ஜ் பண்ண உலகத்தில் இருக்கும் எல்லா புருஷன் பொண்டாட்டி நாடியையும் புடிச்சு பார்த்து கதை எழுதறீங்களா?
என்ன கொடுமை அழகம்மை இது!


Click it and Unblock the Notifications











