ப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க
சென்னை: மகத் தயவு செய்து இன்னொரு முறை அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீர்கள்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியபோது இருக்கும் இடமே தெரியாமல் இருந்தவர் மகத். ஆனால் தற்போது ஓவராக ஆட்டம் போடுபவர் அவர் தான். யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து டூ மச்சாக நடந்து கொள்கிறார்.
இந்த மூன்று பேரும் ஒன்றாகவே தான் இருப்பார்கள்.

காதலி
மகத்திற்கு காதலி இருக்கும்போதே யாஷிகாவை இந்தப் பாடு படுத்துகிறார். இதற்கிடையே கேமரா முன்பு வந்து நின்று பிராச்சி(காதலி) நான் உன்னை மிஸ் பண்ணுகிறேன் என்று சீன் வேறு போடுவார்.

யாஷிகா
யாஷிகாவுடன் சண்டை போட்டால் மகத்துக்கு உடனே காதலி நினைவு வந்துவிடுகிறது. யாஷிகாவின் மீது உள்ள கோபத்தில் கேமரா முன்பு நின்று பிராச்சியை மிஸ் பண்ணுவதாக மீண்டும் தெரிவித்தார் மகத்.

பிராச்சி
தயவு செய்து காதலியை மிஸ் பண்ணுவதாக மீண்டும் ஒரு முறை கூறாதீர்கள் மகத். நீங்கள் அடிக்கும் லூட்டியை எல்லாம் பார்த்தால் காதலியை பிரிந்த சோகத்தில் இருப்பவர் போன்று தெரியவில்லை.

லூட்டி
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது, அதை பிராச்சியும் பார்ப்பார் என்று தெரிந்தே இந்த அளவுக்கு ஆடும் உங்களை பார்த்தால் பார்வையாளர்களுக்கு தான் கோபம் வருகிறது.

கவலை
இந்த மகத் அடிக்கும் லூட்டியை எல்லாம் பார்த்துவிட்டு அந்த புள்ள பிராச்சி எப்படி ஃபீல் பண்ணுமோ என்று பார்வையாளர்களையே பேச வைத்துவிட்டார் மகத்.


Click it and Unblock the Notifications











