Mahalakshmi Serial: மூணு பொம்பளைங்க கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்ய பிளானோ பிளான்!

சென்னை: சன் டிவியின் மகாலட்சுமி சீரியலில் கர்ப்பிணி பார்வதி பெண்ணை, எப்படியும் கொலை செய்துடணும்னு ரெண்டு அம்மாக்களோட சேர்ந்து, ஒரு சின்ன பெண்ணும் சரியான பிளான் போடுது.

ஐராவதி என்கிற அம்மாவுக்கு ஏற்கனவே மகாலக்ஷ்மியை பிடிக்காது. மகாலட்சுமியின் மாமனார் ஊர் தலைக்கட்டு பெரியவர்.ஊர் கோயில் தர்மகர்த்தாவும் இவர்தான். இந்த தர்மகர்த்தா பதவியை தற்போது தந்து மருமகளுக்கு இவர் விட்டுக் கொடுத்ததுதான் இந்த பெண்கள் மூன்று பேருக்கும் பிடிக்கலை

அவரது தங்கை, மற்றும் தங்கையின் மகள் இவங்க மூணு பேரும் சேர்ந்துதான் கர்பிணிப் பெண் பார்வதியை கொலை செய்ய பிளான் போட்டுக்கிட்டே இருக்காங்க.ஒவ்வொரு தடவையும் பார்வதி தப்பிச்சுடறா.

ஐராவதி மதன்

ஐராவதி மதன்

ஐராவதியின் மகன் மதன், இவன் கட்டிட இஞ்சினியர் .ஒரு கிராமத்தில் பார்வதியை சந்திச்சவன், அவளை எப்படியாவது அடைஞ்சுடணும்னு நண்பர்களிடம் பெட் கட்டி, பார்வதியிடம் கல்யாணம் செய்துக்கறேன்னு சத்தியம் செய்து அடைஞ்சுடறான். தொடர்ந்து ரெண்டு பேரும் பழகியத்தில், பார்வதி கர்ப்பமாகிடறா. ஐராவதி மகன்தான் குமார் பார்வதியிடம் தான் வெறும் குமார் என்று பொய் சொல்லிடறான்.

கல்யாணத்துக்கு ஏற்பாடு

கல்யாணத்துக்கு ஏற்பாடு

திருநெல்வேலி தனது ஊருக்கு போயிட்டு அம்மா அப்பாகிட்ட சொல்லி நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொல்லிட்டு போனவன்தான்.பார்வதியை கண்டுக்கலை, பின் அவளுடன் குமார் என்ற பெயரில் வாங்கிய சிம்மையும் தூக்கி எறிஞ்சுடறான்.ஒரு நாள் பார்வதி தன் பாட்டியிடம் சண்டை போட்டுக்கிட்டு, குமாரைத் தேடி திருநெல்வேலியில் அலையறா. அப்போதான் மகாலட்சுமி கண்ணில் பட்டு, அவளுக்கு மாமனாரின் தங்கை வீட்டில் அடைக்கலம் தந்து அவங்களை பார்த்துக்க சொல்றா.

உண்மை தெரியுது

உண்மை தெரியுது

அப்போதுதான் மதனின் அம்மா, மகாலட்சுமி மாமனாரின் தங்கை , அவளின் மகள் மூணு பேருக்கும் பார்வதி வயிற்றில் இருக்கும் குழந்தை மதனுடையதுதான்னு புரியுது. உடனே பார்வதியை கொன்னுட துடிக்கறாங்க காரணம் மகாலட்சுமியின் கொழுந்தனுக்கு ஐராவதியின் பெண்ணையும், மகாலட்சுமியின் நாத்தனாருக்கும் ஐராவதியின் மகன் மதனுக்கும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடக்குது. அதனாலதான்,பார்வதியை கொல்ல துடிக்கறாங்க.

ஆஸ்பத்திரில திட்டம்

ஆஸ்பத்திரில திட்டம்

ஆலவச்சு கடத்தியும் மகாலட்சுமி கணவருடன் சேர்ந்து காப்பாத்திடறா. இப்போ ஆஸ்பத்திரியில் விஷ மருந்து ஊசிபோட்டு கொல்ல பார்த்தும் பார்வதி தப்பிச்சுடறா. நாளைக்கு கல்யாணம் மதனுக்கும் பார்வதிக்குமா,இ ல்லை மகாலட்சுமியின் நாத்தனாருக்குமான்னு பொருத்திருந்து பார்க்கலாம்.

எதுக்கு இதை சொல்றோம்னா...ஒரு கர்ப்பிணிப் பெண்ணை பெண்களை விட்டே இப்படி துன்பத்துக்கு ஆளாக்கறாங்களே...இந்த கொடுமை எல்லாம் எங்கே போய் சொல்றது?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X