பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த புது சிக்கல்… ரொம்ப ஓவரா போனா இப்படித்தான் நடக்கும் !
சென்னை : இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலுக்கு தற்போது புது சிக்கல் வந்துள்ளது.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.
இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியலட்சுமி
இரண்டரை மணிநேரம் திரைப்படங்களை விட, தினமும் புது புது ட்விஸ்ட்டுகளுடன் வரும் சீரியலைத்தான் ரசிகர்கள் விரும்பி ரசித்து பார்க்கிறார்கள். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் கொண்டாடும் முக்கியமாக சீரியல்களில் ஒன்றாக உள்ளது.

ராதிகாவுடன் உறவில்
இந்த சீரியலின் பாக்கியலட்சுமியாக வரும் சுசித்ரா ஷெட்டி கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அழகாக நடித்து வருகிறார். பாக்கியாவின் கணவராக வரும் கோபி, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார். ராதிகாவுக்காக , பாக்யாவை ஏமாற்றி அவருக்கு தெரியாமலே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளார்.

தில்லாலங்கடி கோபி
தில்லாலங்கடி வேலைகளை செய்து வரும் கோபி ஏதோ ஒரு காரணத்தை சொல்லிவிட்டு இரவில் ராதிகாவின் வீட்டில் தங்கி விடுகிறார். கோபி பற்றி செல்வி பலமுறை பாக்யாவிடம் சொல்லியும், என் கணவர் பற்றி எனக்கு தெரியும் உன்வேலையை பாரு என்ற கூறிவிட்டார் பாக்யா, ஆனால், தொடர்ந்து இரவில் வீட்டில் இருப்பதை தவிர்க்கும் கோபி மீது பாக்யாவுக்கு சிறு பொறி தட்டி உள்ளது.

புது சிக்கல்
இப்படி கதை விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்க பாக்கியலட்சுமி சீரியலுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, அந்த சீரியலில் மாமனார் பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி விடுகிறார். அவருக்கு பிசியோதரப்பி அளிக்க வரும் மருத்துவர் மீது இனியாவுக்கு காதல் வந்து விடுகிறது. இவர்களின் காதல் விவகாரம் குடும்பத்திற்கு தெரிந்துவிட, பிசியோதரப்பிஸ்ட் பற்றியும் அவர்களின் வேலை பற்றியும் தரக்குறைவான வகையில் விமர்சிக்கும் வசனம் இடம் பெற்றுள்ளது.

போலீசில் புகார்
பிசியோதரப்பிஸ்ட் பற்றி மோசமாக விமர்சித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் இடம் பெற்ற வசனம் பிசியோதரப்பிஸ்ட் மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாக கூறி புகார் அளித்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











