பாலிமர் டிவியில் ‘ஜூனியர் சூப்பர் டான்சர்’ பட்டம் வெல்லப்போவது யார்?

By Mayura Akilan

குழந்தைகளின் நடனப்போட்டி என்றாலே சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. நளினமான நடனம்... அழகான அசைவுகள் என கண்ணுக்கு இனிமையானவையாகத்தான் இருக்கும்.

பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகும் ஜூனியர் சூப்பர் டான்சர் நிகழ்ச்சியும் இத்தகைய சுவாரஸ்யம் நிறைந்ததுதான். நடன இயக்குநர் கலா இயக்கும் இந்த நிகழ்ச்சியின் முதல்சுற்று முடிவடைந்து மேற்கத்திய சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன.

இதில் வாரம் ஒருவராக வெளியேற உள்ளனர். இதில் வெற்றி பெற்று ஜூனியர் சூப்பர் டான்சர் பட்டம் வெல்லப் போவது யார் என்பதுதான் சுவாரஸ்யம்

குட்டீஸ்களின் நடனம்

குட்டீஸ்களின் நடனம்

8 வயது முதல் 13 வயது வரை உடைய குட்டீஸ்கள்தான் இந்த நடன நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்.

நடுவராக நமீதா

நடுவராக நமீதா

சுட்டிகளின் நடனத்தை கண்டு களித்து மார்க் போட மச்சான் புகழ் நடிகை நமீதாவும், பிரசன்னாவும் நடுவர்களாக இருக்கின்றனர். இதனை இயக்குவது நடன இயக்குநர் கலா.

52 குட்டீஸ்கள் உற்சாகம்

52 குட்டீஸ்கள் உற்சாகம்

நடனமாட தேர்வான 52 குழந்தைகள் தற்போது முதல் சுற்றினை முடித்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மேற்கத்திய சுற்று அடுத்ததாக ஆரம்பமாகிறது.

யார் வெளியேறுவார்?

யார் வெளியேறுவார்?

வாரம்தோறும் 7 பேர் நடனமாடுகின்றனர். இதில் ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர். இதில் ஜூனியர் சூப்பர் டான்சர் பட்டம் வெல்லப்போவது யார் என்பதுதான் சுவாரஸ்யம்.

நிகழ்ச்சியை தொகுக்கும் அபிநய ஸ்ரீ

நிகழ்ச்சியை தொகுக்கும் அபிநய ஸ்ரீ

நடனம் தொடர்புடைய நிகழ்ச்சி என்பதால் இதனை நடிகை அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீயும், டான்சர் பாபியும் தொகுத்து வழங்குகின்றனர். பாலிமர் டிவியில் வாரந்தோறும் ஞாயிறு காலை 10 மணிமுதல் 11 மணிவரை ஒளிபரப்பாகிறது ஜூனியர் சூப்பர் டான்சர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X