»   »  அனல் தெறிக்க... ஜிகர்தண்டா பொங்கல் கொண்டாடும் விஜய் டிவி

அனல் தெறிக்க... ஜிகர்தண்டா பொங்கல் கொண்டாடும் விஜய் டிவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என விடுமுறை தினங்கள் வந்தாலே புதுப்படங்கள் ஒளிபரப்புவார்கள்.

யார் புதுப்படங்களை போட்டு டி.ஆர்.பியில் முந்துவது என்பதுதான் போட்டியே. விளம்பரதாரர்களை கவரவும், அதிக அளவில் விளம்பரங்களை பெறவும் சேட்டிலைட் சேனல்களில் அனல் தெறிக்க ஒரு வாரமாக முன்னோட்டம் போடுவார்கள்.


இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக... தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக என கூவி கூவி வாசகர்களை படம் பார்க்க அழைப்பார்கள் சேனல்களில்.


ஆனால் போடும் முன்னோட்டைத்தையே புதுமையாக போட்டு பொங்களுக்கு அனைத்து சேனல்களுக்கும் குறிப்பாக சன்டிவிக்கு சவால்விட்டுள்ள விஜய் டிவி.


ஜிகர்தண்டா - மெட்ராஸ்

ஜிகர்தண்டா - மெட்ராஸ்

விஜய் டிவியில் ஜிகர்தண்டா, மெட்ராஸ் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது. அதில் வரும் வசனங்களை மாஸ் ஆக ஒளிபரப்பி கிளாஸ் அள்ளுகிறது விஜய்.


பெருசா செய்யணும்

பெருசா செய்யணும்

ஒருடிவிக்கு ரசிகர்கள்தான் பலம். இந்த பொங்கலுக்கு ஏதாவது பெருசா செய்யணும்.


மெட்ராஸ்

மெட்ராஸ்

இப்ப செய் இதான் கரெக்டான டைம் என மெட்ராஸ் பட வசனம் பேசுகிறது. அதோடு மாஸா படம் போட்டாத்தான் கொண்டாட்டம் சந்தோசம் எல்லாம் என்கிறது ஜிகர்தண்டா வசனம்


தொட்டா செத்துருவாங்களா?

தொட்டா செத்துருவாங்களா?

தொட்டா செத்துவாங்களாமே பார்க்கலாம் யாரு சாகுறாங்கன்னு என்கிறார் மெட்ராஸ் அன்பு.


நம்ம படந்தான்

நம்ம படந்தான்

இந்த பொங்கலுக்கு எல்லார் வீட்லையும் நம்ம படம்தான் ஒடணும் என்று கெத்து காட்டுகிறது விஜய் டிவி.


அனல் தெறிக்கணும்

அனல் தெறிக்கணும்

அது மட்டுமல்லாமல் அனல் தெறிக்கணும் என்று பாபி சிம்ஹா சொல்ல நல்ல ஒரு சோசியல் மெசேஜ் என்கிறார் விஜய் சேதுபதி.


ஜிகர்தண்டா பொங்கல்

ஜிகர்தண்டா பொங்கல்

இந்த பொங்கலை ஜிகர்தண்டா பொங்கலாக கொண்டாடும் விஜய் டிவி, பட்டிமன்றம், கலாட்டா நிகழ்ச்சிகள் என கலந்து கட்டி அடிக்கிறது. அதோடு அனிருத் பேட்டி, அட்டகாசமான நிகழ்ச்சிகளை போட்டு இப்போதே சேட்டிலைட் சேனல்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.


சவாலை ஏற்குமா சன்டிவி

சவாலை ஏற்குமா சன்டிவி

பொங்கலுக்கு ஒருவாரத்திற்கு முன்பே படங்களை அறிவிக்கும் சன்டிவி வேலையில்லா பட்டதாரி படம் மட்டுமே போடுவதாக அறிவித்துள்ளது. இதைவிட மாஸ் படங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி சவாலை ஏற்குமா? பார்க்கலாம்.


English summary
Celebrate this Pongal with the special movies Jigarthanda and Madras on your Vijay TV...
Please Wait while comments are loading...