மோமோ சேலஞ்ச் கெடக்கு, முதலில் சித்தப்பு பொன்னம்பலம் சேலஞ்சை பாருங்க
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள பொன்னம்பலம் ஒரு சவால் விட்டுள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து சித்தப்பு பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருந்து கமல் இருந்த மேடைக்கு வந்தவர் டாஸ்கின் போது ஐஸ்வர்யாவின் கழுத்தை நெறித்தன் பின் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறினார்.

ஐஸ்வர்யாவுக்கு காயம் ஏற்படாதபடி தான் நெறித்ததாக கூறியதோடு டெமோவும் செய்து காண்பித்தார். மேலும் அவர் கூறியதாவது,
புரட்சி நேரத்தில் வெடிக்கவில்லை என்றால் மனிதனே கிடையாது. குட்ட குட்ட குனிந்து கொண்டே இருந்தால் நல்லாவா இருக்கு என்றார். அதை கேட்ட கமலோ, அவருக்கு தெரியுது கேட்டுக்கொள்ளுங்கள் என்று பார்வையாளர்களாகிய நம்மை பார்த்து கூறினார்.
நம்மால் ஒரு குட்டிப் பூனையிடம் சண்டை போட முடியாது தெரியுமா?. ஒரு வயது பூனைக்குட்டியுடன் சண்டை போட்டு வெற்றி பெற்றால் இந்த பொன்னம்பலம் சினிமா துறையை விட்டே சென்றுவிடுகிறேன்.
பூனையை ஒரு அறையில் போட்டு கட்டையால் அடித்துப் பாருங்க, அந்த சண்டையில் பூனை தான் ஜெயிக்கும் என்றார் பொன்னம்பலம்.


Click it and Unblock the Notifications











