மன்னிப்பு கேட்டு தலை வணங்கிய பொன்னம்பலம்: கழுத்தை நெறித்த கமல்

By Siva

சென்னை: பிக் பாஸ் மேடைக்கு வந்த பொன்னம்பலத்தின் கழுத்தை நெறித்துக் காட்டினார் கமல் ஹாஸன்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து ஒரு வழியாக பொன்னம்பலம் வெளியே வந்துவிட்டார். கமல் ஹாஸன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்தித்து பேசினார்.

அதன் பிறகு பொன்னம்பலம் வெளியேற்றப்படுவதை அவர் வாயாலேயே சொல்ல வைத்தார் கமல்.

கோவில்

கோவில்

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிய பொன்னம்பலம் அதை கோவில் என்று சொல்லி நீச்சல் குளத்தில் இருந்து நீரை எடுத்து தன் மீதும், போட்டியாளர்கள் மீதும் தெளித்து ஜெய் ஸ்ரீராம் என்று கூறிவிட்டு கிளம்பினார். கோவில் என்றால் அங்கு திரும்பி செல்ல ஏன் போட்டியாளர்கள் பயப்படுகிறார்கள். வெளியே வந்த பிறகு பிக் பாஸ் வீட்டிற்கா, மறுபடியுமா, ஆளை விடுங்கப்பா சாமி என்று அலறுகிறார்கள் சித்தப்பு?

ஞானம்

ஞானம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஒரு அரிய வாய்ப்பு, நிறைய கற்றுக் கொண்டோம், தவறுகளை திருத்திக் கொண்டோம், திருந்திவிட்டோம் என்கிறார்கள் போட்டியாளர்கள். உள்ளே சென்றால் ஞானம் கிடைக்க அது என்ன போதி மரமா? பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது எல்லாம் சின்னப்புள்ளத்தனமாக சண்டை போட்டுவிட்டு வெளியே வந்து சீன் போடுவது வேண்டாமே பாஸ்.

பொன்னம்பலம்

பொன்னம்பலம்

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தவறு செய்திருந்தால், கெட்ட வார்த்தை பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று கூறி பார்வையாளர்களை நோக்கி தலை வணங்கினார் பொன்னம்பலம். செய்வதை எல்லாம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்கிறீர்களா என்று நினைக்கலாம். இதை விட பெரிய தவறு செய்தவர்களையே மக்கள் மன்னித்துவிட்டார்கள், உங்களை மன்னிக்க மாட்டார்களா?

கமல்

கமல்

ஐஸ்வர்யா இந்த போட்டியில் நான் ஜெயிச்சே ஆக வேண்டும் என்று வெறியில் இருந்ததால் அவர் கழுத்தை நெறித்தேன். ஆனால் ஸ்டண்ட் பார்ட்டியான எனக்கு ஐஸ்வர்யாவுக்கு காயம் ஏற்படாமல் நெறிக்க முடியும் என்று கூறி மேடைக்கு வந்த ஒரு பெண்ணின் கழுத்தை நெறித்துக் காட்டினார். இதை நான் முன்பே கூறியிருந்தால் பொன்னம்பலத்திற்கு சாதகமாக பேசுகிறேன் என்பார்கள் என்றார் கமல். மேலும் பொன்னம்பலத்தின் கழுத்தை நெறித்தும் காட்டினார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X