கொழந்தப்புள்ள ஐஸ்வர்யாவை பார்த்து குழந்தை கொடுப்பதை பற்றி பேசிய பொன்னம்பலம்
Recommended Video

சென்னை: பெண் போட்டியாளர்கள் கொந்தளிக்கும் அளவுக்கு பொன்னம்பலம் என்ன செய்தார் என்பது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் பொன்னம்பலத்திற்கு எதிராக கொந்தளித்த ப்ரொமோ வீடியோ வெளியானது. பொன்னம்பலம் அப்படி என்ன பேசினார் என்பதை தெரிந்து கொள்ள நிகழ்ச்சியை பார்த்தபோது மேட்டர் கொஞ்சம் சீரியஸ் தான்.
அவர் விளையாட்டாக பேசுகிறேன் என்று சொல்லிய விஷயம் பிரச்சனையாகிவிட்டது.

ஐஸ்வர்யா
ச்ச்சீ இந்த பொன்னம்பலம் என்ன இப்படி பேசுகிறார். அவருக்கு யார் இனி மரியாதை கொடுப்பார் என்று ஐஸ்வர்யா தனது தோழி யாஷிகாவிடம் கூறியுள்ளார்.

ரம்யா
அடுத்த முறை அவர் இப்படி பேசினால் உங்களின் மகளிடம் இப்படி தான் பேசுவீங்களான்னு கேட்டு சண்டை போடுவேன் என்றார் ரம்யா. வைஷ்ணவியோ அடுத்த முறை பேசட்டும் கிழிஞ்சிடும் என்றார்.

குழந்தை
இரவு நேரத்தில் அனைவரும் ஒரு படுக்கையில் அமர்ந்து ஜாலியாக பேசியபோது ஐஸ்வர்யா பொன்னம்பலத்தை பார்த்து அண்ணா இங்கு வந்து உட்காருங்க என்று கூறியுள்ளார். அதற்கு பொன்னம்பலம் எனக்கு ஏற்கனவே நிறைய குழந்தைகள் உள்ளது, நான் அங்கு வந்தால் இன்னும் நிறைய குழந்தைகள் பிறக்கும் என்றார் என வைஷ்ணவி மும்தாஜிடம் தெரிவித்தார்.

பொன்னம்பலம்
மும்தாஜ் அதிர்ச்சி அடைந்து பொன்னம்பலத்திடம் போய் கேட்க அவரோ நான் விளையாட்டாக தான் சொன்னேன், எதையும் தவறாக நினைத்து சொல்லவில்லை. அவர்கள் தான் லிமிட்டை மீறி நடந்தார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











