பொன்னம்பலம், என்ன தான் இருந்தாலும் வைஷ்ணவியிடம் அப்படி பேசியிருக்கக் கூடாது

By Siva

Recommended Video

பிக் பாஸ் 2 - திருடன் - போலீஸ் கூத்து- வீடியோ

சென்னை: வைஷ்ணவியிடம் பொன்னம்பலம் கூறியது சரியா, தவறா?

ஐஸ்வர்யா, யாஷிகா, மகத், ஷாரிக் ஆகியோர் லூட்டி அடித்தபோது பொன்னம்பலம் சொன்ன ஒரு வார்த்தை பெரிய பிரச்சனை ஆனது. சின்னப் புள்ளையை பார்த்து ஒரு பெரிய மனிதர் இப்படியா ஆபாசமாக பேசுவது என்று சக போட்டியாளர்கள் கொந்தளித்தனர்.

நான் சும்மா விளையாட்டாக சொன்னேன் என்று கூறி அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார் பொன்னம்பலம்.

சென்றாயன்

சென்றாயன்

தூங்கச் சொல்லி பிக் பாஸ் விளக்குகளை சுவிட்ச் ஆப் செய்த பிறகு சென்றாயன் இருட்டோடு இருட்டாக உலவிக் கொண்டிருந்தார். அப்போது வைஷ்ணவி அவரை பார்த்து சென்டு பாய் என்று கூற பதிலுக்கு அவர் குண்டு பாய் என்றார்.

ஆண்கள்

ஆண்கள்

நான் குண்டாக இருந்தால் எப்படி என்னை தூக்கியிருப்பீர்கள் என்று வைஷ்ணவி கேட்டதற்கு சென்றாயனோ, ஆண்களுக்கு என்று ஒரு வீரம், வீராப்பு இருக்கு. எவ்வளவு பெரிய பொம்பளையாக இருந்தாலும் தூக்கிடுவான் என்று ஒரு விஷயம் இருக்கு என்று கூறினார். பின்னர் தான் கூறியது சரியா என்று பொன்னம்பலத்திடம் கேட்டார் சென்றாயன்.

பொன்னம்பலம்

பொன்னம்பலம்

போட்டி என்று வந்தால் எவ்வளவு பெரிய பெண்ணையும் ஆம்பள தூக்கிடுவான்ல அண்ணே என்று சென்றாயன் பொன்னம்பலத்திடம் கேட்டார். படுக்கையில் படுத்திருந்த பொன்னம்பலமோ, டே எஃபெக்ட்ல ஒன்னும் தெரியாது, நைட் எஃபெக்ட்ல நான் தான் வின் பண்ணுவேன் என்றார்.

ஆபாசம்

ஆபாசம்

நைட் எஃபெக்ட்ல நான் நான் தான் வின்னர், டே எஃபெக்ட்ல தோற்றுவிடுவேன் என்று மீண்டும் கூறினார் பொன்னம்பலம். இதை கேட்ட வைஷ்ணவியோ இப்படி எல்லாம் பேசாதீங்க அண்ணே என்றார்.

சொன்னது தப்பு

சொன்னது தப்பு

நீங்க சொன்னது தப்பு. இந்த கொழுப்பால் தான் வாயை கொடுத்து மாட்டினீங்க என்றார் வைஷ்ணவி. சொல்வதையும் சொல்லிவிட்டு நான் ராத்திரி தான் நன்றாக சாப்பிடுவேன் என்று மழுப்பினார் பொன்னம்பலம். பொன்னம்பலம் அப்படி பேசியது தவறா இல்லையா என்று நீங்களே சொல்லுங்க மக்களே.

அப்பா

அப்பா

பொன்னம்பலம், நீங்கள் தப்பாக பேசவில்லை என்று கூறினாலும் நீங்கள் படுக்கை விஷயத்தில் பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தமாக உள்ளது. தெரியாமல் செய்தால் மன்னித்துவிடலாம். இனியாவது திருத்திக் கொள்வது நல்லது. கமல் சார், பொன்னம்பலத்துக்கு நீங்க தான் புத்தி சொல்ல வேண்டும். அப்பா ஸ்தானத்தில் இருப்பதாகக் கூறி ஆபாசமாக பேசுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X