Malar Serial: பூஜா இதுதானா உங்க டக்கு ஐடியா?

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் பூஜா தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக இப்போது கதை ஒளிபரப்பாகிட்டு இருக்கு..

கதிர் என்கிற கதிரேசன் ராணுவ வீரரின் மகன். அதோடு இவன் அசிஸ்டென்ட் கமிஷனரும் கூட. இவனது அக்கா பெண் பூஜா கதிர் மேல ஆசைப்பட்டாலும் அவங்க அமமா, கதிரின் அக்கா தடுக்கறாங்க.

ஆனால், கதிருக்கு சொந்தத்தில் திருமணம் செய்துக விருப்பம் இல்லை. தனக்கான ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கறான்.

பூஜா கதிர்

பூஜா கதிர்

கதிரின் அக்கா ஜோதிடம் தெரிஞ்சவங்க.அவங்க கதிரின் ஜாதகத்தைப் பார்த்து அவனுக்கு முதல் மனைவி தங்காது.ரெண்டாவது மனைவிதான் தங்குமாம். பூஜா அதனால் அவணை விட்டுட்டு இப்போ வேற கல்யாணம் செய்துக்கட்டும். அவ இருக்க மாட்டா, அதுக்கு பின்னால் உனக்கும் கதிருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொல்றாங்க அம்மா. பூஜாவும் அப்போது சரின்னு சொல்லிடறா.

மலர் கதிர்

மலர் கதிர்

கதிருக்கு பார்த்து இருக்கும் பெண்தான் மலர். மலரை கதிருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போகுது. அவளை எப்படி எப்படி எல்லாம் லவ் பண்றான் கதிர். ஆனால், மலர் தான் தற்காப்புக்காக ஒரு கொலை செய்து இருப்பதை மறைத்து வாழ்ந்துகிட்டு இருக்கா. அதனால், இந்த திருமணத்தில் அவ்வளவாக ஒப்புதல் இல்லாமல் இருக்கிறது. ஆனால், திருமண நாளும் நெருங்கி வருகிறது.

மாமா எனக்குத்தான்

மாமா எனக்குத்தான்

அமமா,இனிமேலும் ஜோதிடம், குறி எல்லாத்தையும் நான் நம்ப தயாரா இல்லை.கதிர் மாமா மனசில் மலர் நிரந்தரமா குடியேறிட்டா. அதை என்னால தாங்கிக்க முடியாது. உன் அண்ணன் வேற எனக்கு மாப்பிள்ளை பார்க்கறேன்னு சொல்றார். இனிமேல் என் ஆட்டத்தைப் பாருன்னு சொல்லி புதுசா சில வேலைகளை ஆரம்பிக்கறா.

பூஜா மலர் வீட்டில்

பூஜா மலர் வீட்டில்

மலர் வீட்டில் கதிரும், மலரும் போட்டோ ஷூட்டிலிருக்க பூஜா,மலர் அப்பாவிடம் அப்பா, எனக்கு தலை சுத்துது...வாந்தி வர்ற மாதிரி இருக்குப்பான்னு சொல்றா. சரி வா ஆஸ்பத்திரிக்கு போலாம்னு அழைச்சுட்டு போறார். அங்கே போனால் டாக்டர் கல்யாணம் ஆகாத பூஜா கர்ப்பமாயிருக்கறதா சொல்றாங்க. நீங்கதான் அவங்க அப்பவாமே.. இது ரெண்டாவது குழந்தை..வேணாம்னு சொல்றாங்கன்னு டாக்டர் நாடகம் போட. மலர் அப்பாவுக்கு அதிர்ச்சி.

அப்பா உங்க போன்

அப்பா உங்க போன்

அப்பா உங்க போனை குடுங்க நான் பேசிக்கறேன்..நீங்க மாத்திரை வாங்கிட்டு வாங்கன்னு சொல்றா. வேணும்னே மலர் அப்பா காதில் விழும்படி, கதிர் டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டார். இப்போ எதுக்கு கத்தறே கதிர். உன்னை நான் என்ன கல்யாணம் செய்துக்கோன்னா சொல்றேன். நீ மலரை கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா இரு.. உன் வாழக்கையில் நான் குறுக்கே வர மாட்டேன்னு சொல்றா.

இப்போ மலர் அப்பா தன் பொண்ணை கதிருக்கு கொடுக்கலாமா வேணாமான்னு யோசிக்கறார். கல்யாணத்தை நிறுத்த சொல்ல மாப்பிள்ளை வீட்டுக்கு போறார்.

இதுதான் தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கற கதை.கதிர் கல்யாண பேச்சை எடுத்தப்பவே மாமாவை எனக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு பூஜா சொல்லி இருக்கலாம்ல...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X