Malar Serial: பூஜா கண்ணு போலீஸ் கமிஷனர் மாமாகிட்டேயே இப்படி விளையாடலாமா?

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் பார்க்க பார்க்க ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டும்படி இருப்பது சிறப்பு. எல்லா காட்சிகளும் கனக் கச்சிதமா நம்பும்படி எடுத்து இருக்காங்க.

அசிஸ்டென்ட் கமிஷனர் கதிரேசன். இவரது அப்பா ராணுவ அதிகாரி. இந்த குடும்பத்துல அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கும் கதிருக்கு முறைப் பெண்ணாக பூஜா இருந்தும், அவள் மேல் கதிருக்கு விருப்பம் இல்லை.

அதனால வெளியிலப் பொண்ணு பார்க்கலாம்னு முடிவெடுத்து, மலரை பொண்ணு பார்க்கறாங்க. கதிருக்கும் மலரை ரொம்ப பிடிச்சு போயிருந்து .இரு வீட்டாருக்கும் கூட ரொம்ப பிடிச்சு போகுது.

மலர் பயத்தில்

மலர் பயத்தில்

மலர் மட்டும் அசிஸ்டென்ட் கமிஷனர் மாப்பிள்ளை என்றவுடன் பயந்து நடுங்கறா. காரணம் என்னனு பார்த்தால், டீன் ஏஜில் ஒருவன் தன்னைத் துரத்தி வர அவனைத் தற்காப்புக்காக குத்து விளக்கால் குத்திடறா. அவனும் செத்துட்டதா இன்றுவரை மலரும், அவள் தங்கை சுவாதியும் நினைச்சுகிட்டு இருக்காங்க. இப்படிக் குற்றவாளியா இருக்கும் மலர் எப்படி கதிரை சந்தோஷமா கல்யாணம் செய்துக்குவா?

கல்யாணத்துக்கு ஏற்பாடுகள்

கல்யாணத்துக்கு ஏற்பாடுகள்

மலர், கதிர் கல்யாணத்துக்கு நாட்கள் நெருங்க நெருங்க, கதிர் மலர் மேல் ரொம்ப காதலால் கசிந்து உருகறான். மலர் மலர் என்று உருகறான். கல்யாணத்துக்கு முன்பே மலர் தன்னை காதலிக்க வேண்டும் என்று என்னென்னெவோ செய்யறான். மலருக்கு கதிர் மேல் ஆசை இருந்தாழும் இந்த கல்யாணம் நின்னுருச்சுன்னா நல்லாருக்கும் ஸ்வாதின்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கா.

பொண்ணு பூஜா

பொண்ணு பூஜா

கதிரின் அக்கா பொண்ணு பூஜாவுக்கு கதிரின் மீது காதல் என்றாலும், கதிரின் அக்கா ஜாதகத்தை நம்பறவங்க. அதனால தன் மகளிடம், சும்மா இரு பூஜா.கதிருக்கு முதல் கல்யாணம் தங்காதுன்னு அவன் ஜாதகத்தில் இருக்கு. பிரசன்னம் பார்த்தப்பவும் இப்போதைக்கு உனக்கு நேரம்ச ரியில்லைன்னுதான் வருது. அதனால, முதலில் மலர் கதிர் கல்யாணம் நடக்கட்டும். மலர் போயிருவா, வாழ மாட்டா அப்புறம் உனக்கும் கதிருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடறேன்னு சொல்றாங்க.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை இல்லைம்மா... கதிரும், மலரும் இப்போ ரொம்ப நெருங்கிட்டாங்க. என்னால் அதை பார்க்க முடியலை. இனி என் ஆட்டத்தைப் பாருன்னு சொல்லிட்டு, மலர் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போயி,தான் கதிரால்தான் கர்ப்பம் ஆனதாக நம்ப வச்சுடறா. அப்புறம் என்ன ஒண்ணுமே சொல்லாம கல்யாணம் வேணாம், நிறுத்திடலாம்னு மலரின் அப்பா கதிரின் அப்பாகிட்ட சொல்லிட்டு வந்துடறார்.

படுக்கையும் நொந்தது

படுக்கையும் நொந்தது

பாலும் கசந்தது படுக்கையும் நொந்ததுன்னு சொல்றது போல, கதிர் மலரை மறக்க முடியாம தவிக்கறான்.மலரும் பேச முடியாமல் தவிக்கறா. ஒரு நாள் வீட்டுக்கு போயி மலரைப் பார்க்கலாம்னு போக, அவங்க அப்பா பார்த்துட்டு மலரை அழைச்சுட்டு போயிடறார். சுவாதியும் பிரச்சனை எல்லாம் முடியற வரைக்கும் வீட்டுக்கு வராதீங்க மாமான்னு சொல்றா.கதிர் கண் கலங்கி போறான்.

பூஜாவிடம் நடந்ததை

பூஜாவிடம் நடந்ததை

பூஜாவிடம் நடந்ததை சொல்ல, அவ அலட்சியமா, இனிமே ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர முடியாது மாமான்னு சொல்ல, அது மட்டும் இல்லாம கதிரின் அக்காவும், பூஜா கதிரை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான்னு கதிர் அம்மாகிட்ட சொல்ல ஒன்னும் ஒன்னும் இரண்டு என்று கதிரின் போலீஸ் மூளை கணக்கு போடுது .டாக்டரை பிடிக்கறான், இது இது இப்படி இப்படி நடந்து இருக்கலாம்னு ஸ்கெட்ச் போட்டு பூஜாவை வலையில் சிக்க வைக்கிறான்.

மலர் கதிர்

மலர் கதிர்

பூஜாவையே மலரின் அப்பாவை கூப்பிட வச்சு, டாக்டரிடம் சேர்ந்து விளக்கம் சொல்ல, மலரின் அப்பாவுக்கு உண்மை தெரிஞ்சுருது. பின்னே போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனர் வீட்டுலே தப்பு நடந்தால்? ஆசை இருந்தால் கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் முன்பே சொல்லி, கதிரை பிடிவாதமா கல்யாணம் செய்து இருக்கலாம்தானே...இனி மலர் கதிர் கல்யாணம்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X