Malar Serial: அடடே.. ராணுவ அதிகாரி மாமா ரொம்ப ஸ்டிரிக்ட் ஆச்சே.. விடுவாரா?

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில், மலரின் தாய் மாமா ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. தாய் மாமா மகன் கதிரேசனை அடைய தான் சொன்ன பொய்யால் பூஜா ஸ்ட்ரிக்ட் அதிகாரி தாய் மாமாகிட்ட ஆதாரத்தோடு மாட்டிக் கொண்டாள்.

தாய் மாமாவின் மகன் கதிரேசன் போலீஸ் இணை கமிஷனர்.அழகானவன், அன்பானவன், இவன் மீது பூஜாவுக்கு காதல் வந்துருது. கதிர் மாமாவை கல்யாணம் செய்துக்க பூஜா ஆசைப்பட்டு, மாமாவிடம் கேட்க ,மாமா சொந்தத்தில் கல்யாணம் கூடாது என்று சொல்லிவிடுகிறார்.

பூஜாவின் அம்மாவாலும் அண்ணனை எதிர்த்து பூஜாவுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும், அவர் ஜாதகம், பிரசன்னம் பார்ப்பதில் வல்லவர். அவர் கதிரின் ஜாதகத்தைப் பார்த்து, இவனுக்கு முதல் கல்யாணம் தங்காது என்றும், அடுத்த கலயாணம் உன்க்கு செய்துக்கற மாதிரி செய்யறேன் பூஜான்னு சொல்றாங்க.

கதிர் மலர்

கதிர் மலர்

இதனால் கதிரின் அப்பா, கதிருக்கு வெளியில் பெண் பார்க்க முனையும்போதுதான், கோயிலில் கதிரி உறவுக்கரங்க ஒருத்தர், குடும்பத்துடன் கோயிலுக்கு வந்திருந்த மலரை பெண் பார்க்கலாம். கதிருக்கு முடிக்கலாம் .மலர் ரொம்ப நல்ல பெண் என்று சொல்றாங்க. முதல் பார்வையிலேயே மலரின் மீது காதல் வந்துருது கதிருக்கு.மலர் வீட்டுக்கு பெண் பார்க்கப் போகும் போது, போலீஸ் கமிஷனர் என்று மலர் பயத்தில் இருக்க, கட்டினால் உன்னைத்தான் கட்டுவேன்னு சொல்லிட்டு வந்துடறான் கதிர்.

தற்காப்பு கொலை

தற்காப்பு கொலை

ஸ்பீச் தெரபிஸ்ட்டாக இருக்கும் மலர் தனது தற்காப்புக்காக ஒருவனை குத்து விளக்கால் குத்தி கொன்று விட்டதாகவும், அதனால், போலீஸ் கமிஷனர் என்றால் பயமில்லாமல் எப்படி இருப்பது என்றும் தங்கையுடன் விவாதிக்கிறாள். தங்கை சுவாதிக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும். அவ்வப்போது தங்கைதான் அக்காவுக்கு ஆறுதல் சொல்லியும் வருவாள். கல்யாண நாளும் நெருங்கி. கதிர் மலர் போட்டோ ஷூட் கூட முடியும் நேரத்தில் பூஜாவுக்கு கதிர் மாமா தனக்கு கிடைப்பார் என்கிற நம்பிக்கை போய்விட்டது. ஆனாலும் கதிரின் மேல் காதல் கூடிவிட்டது.

பூஜா பார்த்த வேலை

பூஜா பார்த்த வேலை

கல்யாணத்தை நிறுத்த பூஜா மலரின் அப்பாவி அப்பாவை வைத்து ஒரு திட்டம் போடறா. மலரின் அப்பாவை தலை சுத்துது ,என்னை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போங்கப்பான்னு போன் செய்து வரவழைக்கறா. டாக்டரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக மலரின் அப்பாவிடம் போய் சொல்ல சொல்லி 50 ஆயிரம் பணம் தர்றா. டாக்டரும் உங்க பொண்ணு ரெண்டாவது கர்ப்பமாமே... இது வேணாம்னு சொல்றாங்க. எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கலைன்னு டாக்டர் மலரின் அப்பாவிடம் சொல்ல அவருக்கு தலை சுத்துது.

பூஜா கதிருடன்

பூஜா கதிருடன்

வெளியில் வந்தால் பூஜா, மலரின் அப்பா காதில் விழும்படி கதிருடன் பேசுவது போல நடிக்கறா. இந்த கர்ப்பத்துக்கு நீதான் காரணம்.ஆனல், உன்னை கல்யாணம் செய்துக்க சொல்லி நான் வற்புறுத்தலை .நீ மலரை கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷமா இருன்னு சொல்றா. இதை கேட்ட எந்த அப்பனாவது சும்மா இருப்பானா, கதிரின் அப்பாவிடமே போயி, இந்த கல்யாணம் நடக்குதுன்னு சொல்லிட்டு வந்துடறார்.

பின்னர் போலீசாக

பின்னர் போலீசாக


உடைந்து போன கதிர் பின்னர் சுதாரித்துக் கொண்டு, தனது போலீஸ் மூளையால் என்ன நடந்து இருக்கும்னு யோசிச்சு செயல் படும்போது, பூஜாதான் குற்றவாளின்னு தெரியுது.அதற்கான அடையாளங்களை பூஜா அழித்து இருந்தாலும், அவளை உண்மையை சொல்லச் சொல்லி, தனது அப்பாவிடமும், மலரின் அப்பாவிடமும் நிருபித்து விடறான். இப்போ கல்யாண ஏற்பாடுகள் மீண்டும் தொடங்குது.

ஆனால், தவறு செய்த பூஜாவும், தனது தங்கையும் இனி இந்த வீட்டில் இருக்க கூடாதுன்னு, ராணுவ அதிகாரி மாமா சொல்றார். அவர் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் ஆச்சே விடுவாரா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X