Poonam Pandey: நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்.. காரணத்தை புட்டு புட்டு வைத்த நடிகை பூனம் பாண்டே!

மும்பை: பாலிவுட்டில் நடிகை பூனம் பாண்டே என்றாலே சர்ச்சைக்குரிய நாயகிதான். தன்னை டாக் ஆப் த சிட்டியாக மாற்ற என்ன வேண்டுமானாலும் பூனம் பாண்டே செய்வார் என்ற பேச்சு, பாலிவுட் வட்டாரங்களில் உள்ளது. இந்நிலையில் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான லாக் - அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நன்கு பிரபலமடைந்தார். இவர் தற்போது கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தனது சொந்த வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பூனம் பாண்டே, பாலிவுட்டின் கிளாமர் குயின். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வைத்து வரும் நடிகை இவர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுழைந்தாலே, இவருக்கும் கிளாமருக்கும் 10 பொருத்தமும் பக்காவாக பொருந்தி உள்ளது என்பது நன்றாகத் தெரியும். இது மட்டும் இல்லாமல், அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் மாட்டிக் கொள்வார். இந்த சர்ச்சைகளில் அவர் மாட்டுவதற்கு காரணம், இவர் டாக் ஆப் த சிட்டியாக வரவேண்டும் என்பது மட்டும்தான் என்ற விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

ஒரு முறை தான் இறந்துவிட்டதாக தகவலைப் பரப்பி நாடகமாடியவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்படியான நிலையில் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தனது சொந்த வாழ்க்கை குறித்து, குறிப்பாக பார்ட்னர்ஷிப் லைஃப் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள தகவல்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. பூனம் பாண்டே, பாலிவுட் தயாரிப்பாளர் சாம் பாம்பேயை திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் சாம் பாம்பேவின் பெயரைக் குறிப்பிடாமல், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறுகிறார்.

Actress Poonam Pandey BREAKS Silence On Domestic Violence And How It Changed Her View On Relationships
குடும்ப வன்முறை: அதாவது அவர் பேசும்போது, " நான் இதுவரை யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. வரும் காலங்களிலும் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ஆனால் ஒரு முறை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போதுதான் நான் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டேன். அது எனது மனதில் மிகப்பெரிய வலியையும் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. நான் அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன்.

இன்னொரு உறவு: ஒரு முறை நான் எனது வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்தேன். காவல்துறையினர் எனது வீட்டிற்குள் நுழைந்து சுயநினைவின்றி கிடந்த என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். காவல்துறையினரின் சீருடை, காவல் துறை அலுவலகம், மருத்துவமனை ஆகிவற்றை மீண்டும் நான் எதிர்கொள்ள நேரிடுமோ என்ற அச்சம் எனக்குள் இப்போதும் இருக்கிறது. இதன் காரணமாக நான் இன்னொரு உறவில் துணிந்து இறங்க முடியவில்லை.

Actress Poonam Pandey BREAKS Silence On Domestic Violence And How It Changed Her View On Relationships

வாழ்க்கை வாழத்தான்: இது போன்ற விஷயங்களுக்கு நான் அதிக முக்கியத்தும் கொடுக்காமல், எனது சிறிய வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நினைக்கிறேன். வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உங்கள் வாழ்க்கையையும் நேரத்தையும் விரயம் ஆக்குவதைக் காட்டிலும், அவற்றை விட்டு விட்டு விலகிச் சென்று நிம்மதியாக வாழ்வது தான் புத்திசாலித்தனம்" என்று பேசியுள்ளார். பூனம் பாண்டே குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் அவர் தன்னைப் போல பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்கள், அந்த பிரச்னைகளை விட்டுவிட்டு வாழ்க்கையை நிம்மதியாக வாழ வேண்டும் என கூறியிருப்பதற்கு மாற்றுக் கருத்துகள் எழுந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X