கவினுடன் சேர்ந்த பாவத்திற்கு கக்கூஸ்லியாவான லாஸ்லியா
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் லாஸ்லியாவின் பெயர் கெட்டுவிட்டது.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்ததில் இருந்து பெரும்பாலான நேரம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் லாஸ்லியா. இந்நிலையில் தான் கவின், சாக்ஷி காதல் கதையில் லாஸ்லியாவை கொண்டு வந்து அதை முக்கோண காதல் ஆக்கினார் பிக் பாஸ்.
முதலில் பட்டும்படாமலும் பழகிய லாஸ்லியா பின்னர் கவின் மீது ஃபீலிங்ஸ் காட்டத் துவங்கிவிட்டார்.

லாஸ்லியா ஆர்மி
லாஸ்லியா அழகாக உள்ளார், நன்றாக பாட்டு பாடுகிறார், டான்ஸ் ஆடுகிறார் ஆகிய 3 காரணங்களுக்காக தான் லாஸ்லியா ஆர்மி அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. எந்த ப்ரொமோ வீடியோ வெளியானாலும் லாஸ்லியா க்யூட், அழகு என்பதை தவிர அவரை பற்றி பேச அவரின் ஆர்மிக்கு வேறு பாயிண்ட் இல்லை. தற்போது அப்படி புகழ்பாடுவதையும் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

டிராமா
முக்கோண காதல் கதையில் கோர்த்துவிட்ட பிறகு லாஸ்லியா அவ்வப்போது தனது நிஜ குணத்தை வெளிப்படுத்துகிறார். இந்த காதல் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை மட்டுமே என்பது தெரிந்தும் லாஸ்லியா இப்படி செய்து கொண்டிருக்கிறார். கவினுடன் சேர்ந்த பாவத்திற்கு அவரை கக்கூஸ்லியா என்று பார்வையாளர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

லாஸ்லியா
லாஸ்லியா உண்மையாக இல்லாமல் நடிக்கிறார் என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள். லாஸ்லியா பெரும்பாலான நேரம் அமைதியாக இருப்பது அவரின் ஸ்ட்ராடஜி என்று முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ரம்யா கூட தெரிவித்துள்ளார். யார் பக்கமும் சாயாமல் நியூட்ரலாக இருந்த ரம்யா அப்படி கூறியுள்ளதால் அவர் பேச்சை நிச்சயம் நம்பலாம்.

இமேஜ்
அந்த பொண்ணு லாஸ்லியா அதுபாட்டுக்கு இலங்கையில் அழகுத் தமிழில் செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தது. அவரை போய் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து பெயர் கெட்டுப் போனது தான் மிச்சம். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவின் லாஸ்லியாவை ஒன்றும் திருமணம் செய்யப் போவது இல்லை. வெளியே காதலி இருந்தும் இந்த அளவுக்கு ஆட்டம் போடும் கவின் லாஸ்லியாவிடம் மட்டும் உண்மையாகவா இருக்கப் போகிறார். பாவம் அந்த புள்ள.


Click it and Unblock the Notifications











