கடைசியில் கமலையே வச்சு செஞ்சுட்டாரே பிக் பாஸ்
Recommended Video

சென்னை: கடந்த வார நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஆண்டவரையும் நடிக்க வைத்துவிட்டாரே பிக் பாஸ் என்கிறார்கள்.
கடந்த வாரம் ஐஸ்வர்யா ஓவர் சீன் போட்டு அட்டகாசம் செய்தார். அந்த டாஸ்க் முடிந்தும் அவர் கத்த அதை பார்த்து கமல் ஹாஸன் கோபப்பட்டு தனது கோட்டை கழற்றி தரையில் போட்டு சட்டை கையை மடக்கினார்.
அப்பா, இப்பொழுதாவது கமலுக்கு கோபம் வந்ததே என்று பார்வையாளர்கள் சந்தோஷப்பட்டனர்.

கோபம்
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பியடித்து தமிழ் நிகழ்ச்சியை நடத்துவது பார்வையாளர்கள் அறிந்ததே. இந்தி நிகழ்ச்சியில் சல்மான் கான் கோபப்பட்டு கோட்டை கழற்றி தரையில் போட்டு சட்டை கையை மடித்ததை காப்பியடித்து கமல் ஹாஸனையும் அப்படியே செய்ய வைத்துள்ளனர்.

ஆண்டவர்
கடைசியில் ஆண்டவரையும் ஸ்கிரிப்ட்படி நடிக்க வைத்துவிட்டாரே பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் நொந்துள்ளனர். மீம்ஸ் கிரியேட்டர்களோ இந்த காட்சியை வைத்து கமல் ஹாஸனை கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர்.
சல்மான்
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் கோபப்பட்டு கோட்டை கழற்றிய வீடியோ இது தான் என்று கூறி நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

எஸ்கேப்
போட்டியாளர்களை தனி அறையில் தங்க வைப்பது, வீட்டில் இருந்து தப்பியோட முயற்சி செய்ய வைப்பது, சிறையில் அடைப்பது, காதல் ஜோடியை உருவாக்குவது ஆகிய காட்சிகளை இந்தியில் இருந்து காப்பியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் செய்த அதே காரியத்தை கமலையும் செய்ய வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











