அய்யோ பாவம், டேனியை நம்பி ஏமாந்த பொன்னம்பலம்

By Siva

Recommended Video

டேனியை நம்பி ஏமாந்த பொன்னம்பலம்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு விஷயம் சுவராஸ்யமாக இருந்தது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் வெகுநேரமாக பேசிவிட்டார். நிகழ்ச்சியை பார்க்க பார்க்க தூக்கமாக வந்தது.

அட போங்கய்யா என்று பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்தபோது தான் சில காட்சிகள் அவர்களை சிரிக்க வைத்தன.

படுக்கை

படுக்கை

ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா ஆகியோர் செய்த குறும்புத்தனம் முதல்முறையாக எரிச்சலூட்டாமல் ரசிக்கும்படியாக இருந்தது. பெட்டில் உள்ள டிராயரில் ஜனனியை படுக்க வைத்து மூடிவிட்டு பாலாஜியை அழைத்தார் ஐஸ்வர்யா. இந்த டிராயரை திறக்கவே முடியவில்லை உதவுங்கள் என்று ஐஸ்வர்யா பாலாஜியிடம் கேட்டார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

படுக்கையறைக்கு வந்ததுமே டிராயருக்குள் ஜனனி தான் இருக்கிறார் என்றார் பாலாஜி. பின்னர் டிராயரை திறந்து பார்த்ததும் பயந்துபோய் ஜனனியை கையில் அடித்தார் பாலாஜி. பாலாஜி பயந்ததை பார்த்து அங்கிருந்த பெண் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து சிரி சிரி என்று சிரித்தனர். இத்துடன் அவர்கள் ஆட்டையை முடித்துக்கொள்ளவில்லை.

யாஷிகா

யாஷிகா

ஐஸ்வர்யாவை பெட்டின் டிராயரில் படுக்க வைத்துவிட்டு டேனியை அழைத்து வந்தார் யாஷிகா. டிராயரை திறக்க முடியவில்லை நீங்களாவது உதவுங்கள் என்று கூறி நடித்தார் யாஷிகா. டேனி டிராயரை திறந்து பார்த்தால் ஐஸ்வர்யா சிரித்தபடி படுத்துக் கிடந்தார். பாலாஜியை போன்று டேனி அதிர்ச்சி அடையவில்லை. சிரித்தபடியே சமாளித்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

டேனி போய் பொன்னம்பலத்தை அழைத்து வந்து டிராயரை திறக்க வைத்தார். அவர் டிராயரை திறந்தபோது உள்ளே ஜனனி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பயந்துட்டீங்களா என்று மற்றவர்கள் கேட்டதும் நான் பயப்படவில்லையே என்று மழுப்பினார். இல்லை இல்லை அவர் பயந்ததை நான் பார்த்தேன் என்று டேனி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X