For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Pournami serial: கண் காணாத இடத்தில் மனசு விட்டு அழறா பவுர்ணமி பாவம்!

|

சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் பவுர்ணமிக்கு எத்தனையோ மனக்கஷ்டங்கள் வந்தபோதும் தாங்கிக்கொண்ட பவுர்ணமி, இன்று தனிமையில் ஒரு இடம் கிடைத்ததும் மனம் வெதும்பி வாய்விட்டு கதறி அழுகிறாள்.

காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பவுர்ணமி சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல். சிம்பிள் கதைதான்....காட்சிகளில் சுவாரஸ்யம், மனக்கஷ்டம், குடும்ப நிலவரங்களை சரியாக அமைத்து ஒவ்வொரு எபிசோடையும் ஷூட் செய்திருப்பது சீரியலைப் பார்க்க தூண்டுது.

வேற்று மொழிகளில் இப்படி எடுக்கப்படும் சீரியல்களை மக்கள் பார்க்க நேரிடுவது நல்ல விஷயம்தான்... வாழ்க்கை என்பது எல்லாருக்கும் ஒன்றுதான் என்று பாதி பேருக்கும், ஒன்று போல இருப்பதில்லை என்று பாதி பேருக்கும் இப்படிப்பட்ட கதைகள் உணர்த்துகின்றன.

Arundhathi serial: சீரியல்களில் இப்போது முருகன் கடவுளுக்கு உகந்த நேரம் அரோகரா!

கதறி அழுகிறாள்

கதறி அழுகிறாள்

பவுர்ணமி பிறந்த அன்றிலிருந்தே அவள் அப்பா சக்கரவர்த்திக்கு பவுர்ணமி மேல் அளவு கடந்த வெறுப்பு. இவள் பிறந்ததுதான் தன் உயிருக்கு உயிரான மனைவி வாசுகி இறந்தாள் என்று. பெரிய தொழிலதிபர்...பவுர்ணமி ராசி இல்லாதவள் என்கிற சென்டிமென்ட் சக்கரவர்த்திக்கு எப்போதும் உண்டு. சக்ரவர்த்தி ரெண்டாவது கல்யாணம் செய்துக்கிட்ட வசந்தியையும் பவுர்ணமி கூட பேச்சு வச்சுக்க கூடாது என்று சொல்லிவிடுகிறார். சின்னஞ்சிறு குழந்தை பவுர்ணமியை பாட்டியும், புருஷனுக்கு தெரியாமல் வசந்நிதியும்தான் வளர்க்கிறார்கள்.

சக்ரவர்த்தி பவானி

சக்ரவர்த்தி பவானி

சக்ரவர்த்தியின் ரெண்டாவது மனைவி வசந்திக்கு பிறந்த பவானி மேல் சக்கரவர்த்திக்கு கொள்ளை பிரியம். இவளுக்கும், பவுர்ணமிக்கு கூட நல்ல அன்பு உண்டு என்றாலும், அப்பாவுக்கு மட்டும் பவுர்ணமி எதிரிதான்.இது என்ன இப்படி ஒரு கதை என்றாலும், அவரோட சென்டிமென்ட் அது. இப்படிப்பட்ட நிலையில்தான் பவுர்ணமிக்கு வந்த காதல் கடிதத்தை, நம்ம பொண்ணு பவானி மட்டும்தானேன்னு யோசிக்காம அவகிட்ட குடுத்துடறார். இப்போ பவுர்ணமி காதலிச்ச ராம்கியை தங்கை பவானிக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க. பவானியும் ராம்கியை காதலித்தாள் என்றாலும் பவுர்ணமி, ராம்கி பள்ளிக்கால நண்பர்கள். இருவரும் இடையில் சந்தித்து கொண்டபோது காதலித்தார்கள் என்பதுதான் உண்மை.

அனுப்பிடு பவுர்ணமியை

அனுப்பிடு பவுர்ணமியை

சக்ரவர்த்தி தன் மனைவியிடம், என் பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கும்போது அவ வீட்டில் இருக்கக் கூடாது.ரெண்டு நாளைக்கு எங்கியாவது அனுப்பி வைன்னு பெத்த அப்பனே சொல்றார். பவுர்ணமியும் ஹாஸ்டலில் தங்கி வருவதாக சொல்லிவிட்டு வெளியில் புறப்படுகிறாள். அப்போதுதான் ராம்கி அவளை தன் வீட்டுக்கு அழைச்சுட்டு போயி தங்க வைக்கிறான்.இங்குதான் ராம்கியின் அம்மா அப்பா பவுர்ணமியைத் தூண்டிவிட்டு, உன்னைத்தான் என் பையன் லவ் பன்றான். ஆனா,உங்கஅப்பாவுக்கே உன்னை பிடிக்கலை. உன்னை கல்யாணம் செய்துகிட்டா எந்த வரதட்சணையும் உங்க அப்பா தர மாட்டார். ராம்கியை விட்டு நீ போயிடுன்னு சொல்றாங்க.

பவுர்ணமிக்கு தெரியுது

பவுர்ணமிக்கு தெரியுது

அப்போதான் தெரியுது...ராம்கியைத்தான் பவானி காதலித்தாள் என்கிற உண்மை. அதோடு தன்னைப் போல ராம்கியும் தன்னை காதலித்தான் என்கிற உண்மையும். பவுர்ணமிக்குத் தெரியுது.ராம்கிக்கு தங்கையை கல்யாணம் செய்துக்க லெட்டர் எழுதி வச்சுட்டு கண்காணாத இடத்துக்கு போயிடறா. அங்கே சோனுவோட ஆட்கள் அவளை கடத்திட அங்கே இருந்து தப்பிச்சு வந்துடறா பவுர்ணமி. அப்போதுதான் பவானி கிட்டயும், ராம்கி கிட்டயும் போனில் பேசி வாழ்த்துக்கள் சொல்றா.

தங்கச்சிக்காக ராம்கியையும்

தங்கச்சிக்காக ராம்கியையும்

ஒரு சின்ன கோயிலில் பாறை மேல் உட்கார்ந்து கொண்டு ,சாமி எனக்கு அம்மா பாசம் கிடைக்கலை...அப்பா என்னை எப்போதும் வெறுக்கறார். இப்போ நான் காதலிச்ச ராம்கியையும் என் தங்கச்சிக்காக விட்டுக் கொடுத்துட்டேன்.... இன்னும் எத்தனை கஷ்டமா இருந்தாலும் எனக்கே குடுத்துடு. அதுக்காகவே பிறந்தவ நான்... அவங்களுக்கு எந்த கஷ்டம் குடுக்கறதா இருந்தலும் எனக்கே குடுன்னு சொல்லிட்டு கதறி அழறா பாவம்.

English summary
Sun TV's pournami serial pournami , despite suffering a lot of sadness, today, when she found a place to be alone, she was crying and crying.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more