Azhagu Serial: மகேஷ் கேட்டால் உயிரையே குடுப்பேன்.. பூர்ணாவா இது?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் மகேஷ் மீது எப்போதும் வெறுப்பில் இருக்கும் பூர்ணா, இப்போது மகேஷ் என் உயிரை கேட்டால் கூட தருவேன் அவனுக்கு பிள்ளையைப் பெத்து தர மாட்டேனான்னு சொல்றா.
பூர்ணா அழகம்மையின் மூத்த மகன் ரவியை காதலிச்சு, சந்தர்ப்ப வசத்தால் ரவியின் தம்பி மகேஷுக்கு மனைவியானவள். அந்த கோபம் அவள் மனசில் இருக்கும் தானே!
ரவி தனக்கு கிடைக்காமல் எங்கிருந்தோ வந்த ரவியின் நண்பன் மனைவி கணவன் இல்லாத சுதாவுக்கு கிடைச்சதில் குடும்பத்தின் மீதே ஆத்திரத்தில் இருக்கா பூர்ணா

பூர்ணா கோவத்தில்
அழகம்மை குடும்பமே சேர்ந்து தன்னை ஏமாற்றி விட்டது என்று உச்ச கட்ட கோவத்தில் இருக்கா பூர்ணா. அதனாலேயே அழகம்மை குடும்பத்துக்கு கெடுதலா செய்ய நினைக்கிறா. புருஷன் மகேஷையும் ஒதுக்கிட்டு அவளை பெத்தவங்க பெரிய லாயர் சகுந்தலா தேவிதான் என்று தெரிஞ்சதும் அவங்க வீட்டுக்கு போயிடறா. ஆனா, மகேஷ் தனக்கு குழந்தை வேண்டுமென்று பூர்ணாவுக்கு மயக்க மருந்து கொடுத்து உறவு கொண்டதில் கர்ப்பமாக இருப்பது தெரிந்து அதிர்ச்சியாகறா.

மதன் காவ்யா
மதன் சகுந்தலா தேவியின் மகன், பூர்ணாவின் தம்பி. இவன் காவ்யாவை காதலிச்சு, அம்மாவை எதிர்த்துக்கிட்டு கல்யாணம் செய்துக்கறான். இவனை மீண்டும் நம்மை வீட்டுக்கு அழைச்சுட்டு வரேன்னு சொல்லி நல்ல பெண் மாதிரி புகுந்த வீட்டுக்கு வர்றா. அழகம்மை குடும்பத்தினரும் நம்பிடறாங்க. சுதா மட்டும் அவளை நம்ப மறுக்கறா.

குல தெய்வம் கோயிலுக்கு
இந்த சமயத்தில்தான் குடும்பமே மலை மேலிருக்கும் அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கும் குல தெய்வ கோயிலுக்கு போறாங்க அங்கே இவங்கப் போன வேன் மலையிலிருந்து காட்டில் விழுந்து எல்லாரும் உயிர் தப்பியதே பெரும் புண்ணியம் என்கிற அளவுக்கு அழகம்மையின் பிரார்த்தனை எல்லார் உயிரையும் காப்பாத்தி விட்டது.

மகேஷ் மேல காதல்
காட்டில் தனியாக மாட்டிக்கொண்டால் எப்படி உயிர் வாழ்வதுன்னு டிஸ்கவரி சேனலில் ஒரு நிகழ்ச்சியே நடத்தறாங்க. அது மாதிரி மாட்டிகிட்ட பூர்ணாவும், மகேஷும் காட்டில் எப்படி வாழ்ந்தார்கள் எனும் போது அவன் மீது வந்த லவ்தான் பூர்ணாவுக்கு.

பறவை முட்டைகளை சுட்டு
நடக்க முடியாத பூர்ணாவை தூக்கிட்டு, நடக்க முடியாமல் தானும் நடக்கிறான்.வாய்க்காலை அவளால் தாண்ட முடியாது எனும்போது தனது உடம்பை பாலமாக்கி அவளை இக்கரைக்கு கொண்டு வந்தான். பசிக்குது என்று பூர்ணா தவிக்கையில் மரத்தின் மேலிருந்த கூட்டில் பறவை முட்டைகளை எடுத்து கல்லை உரசி நெருப்பை உண்டாக்கறான். அதில் முட்டையை சுட்டு பூர்ணாவுக்கு சாப்பிட குடுக்கறான்.

கன்னா பின்னா காதல்
இப்போதான் பூர்ணாவுக்கு மகேஷ் மேல கன்னா பின்னான்னு காதல் வந்துருது. தோழி, என்னாடி மகேஷை பார்த்து இப்படி உருகறேன்னு கேட்க, அவன் என்னை லவ் பண்ண வச்சிட்டாண்டி... இவ்ளோ நாள் அவனை நான் மிஸ் பண்ணிட்டேன்னு சொல்றா பூர்ணா. அப்படின்னா குழந்தைன்னு கேட்க, அவன் கேட்டா என் உயிரையே தருவேன். குழந்தை பெத்து தர மாட்டேனான்னு கேட்கறா.
நல்ல மாற்றம்தானே...மாற்றம் ஒன்றே மாறாதது!.


Click it and Unblock the Notifications











