Poornima: 16 லட்சம் பணம்.. வனிதா வீட்டில் பார்ட்டி வச்சாரா பூர்ணிமா.. ஒரே பிளர்ரா இருக்கே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்ட போட்டியாளர்கள் எல்லாம் எவிக்ட் ஆகி வெளியேறிய நிலையில், தொடர்ந்து கெட்டூகெதர், பார்ட்டி என சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரம் 16 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பூர்ணிமா ரவியும் வனிதா விஜயகுமார் வீட்டில் பார்ட்டி கொண்டாடிய போட்டோக்கள் தற்போது வெளியாகி தீயாக பரவி வருகின்றன.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அடுத்த வாரத்துடன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் ஒரு வழியாக நிறைவடைகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது. அதற்கு காரணம் இதில், இடம்பெற்ற போட்டியாளர்கள் தான். ஆரி அர்ஜுன், ராஜு பாய் போல வெயிட்டான போட்டியாளர்கள் இல்லை என்கிற உணர்வு கடைசி வரை ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது. அதே போல மாயாவுக்கு ஃபேவராக கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் டீம் கடைசி வரை அவரை காப்பாற்றி வருவதும் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

மாயாவுக்கு பதில் விசித்ரா: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மாயா தான் வெளியேறியிருக்க வேண்டிய நபர் என்றும் அவருக்கு பதிலாக விசித்ராவை பிக் பாஸ் டீம் வேண்டுமென்றே வெளியே அனுப்பி விட்டது என்றும் விட்டால் மாயாவுக்கே டைட்டிலையும் தூக்கிக் கொடுத்தாலும் கொடுப்பார்கள். கடந்த சீசனிலேயே அசீமுக்கு டைட்டில் கொடுத்தவர்கள் தானே இவர்கள் என ரசிகர்கள் கடுப்படித்து வருகின்றனர்.

பணப்பெட்டியுடன் பூர்ணிமா எஸ்கேப்: பிக் பாஸ் சீசன் டைட்டில் மாயாவுக்கு கிடைக்கப் போகிறதா? அல்லது அர்ச்சனாவுக்கு கிடைக்கப் போகிறதா? என்கிற குழப்பம் நிலவி வரும் நிலையில், அதையெல்லாம் தேவையில்லை டென்ஷன் இல்லாமல் 16 லட்சம் பணப்பெட்டி 14 லட்சம் சம்பளத்துடன் மொத்தமாக 30 லட்சத்துடன் பெரிய கும்பிடு போட்டு எஸ்கேப் ஆகி விட்டார் பூர்ணிமா ரவி.

வனிதா வீட்டில் பார்ட்டி: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்சன், விக்ரம் உள்ளிட்டோர் தொடர்ந்து ஜோவிகாவுடன் தான் ஜாலி டூர் அடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா ரவி வனிதா விஜயகுமார் வீட்டில் அனைவருக்கும் ட்ரீட் வைத்தாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அவர்களின் ரீயூனியன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.

ஒரே பிளர்: நிக்சன், ஜோவிகா உள்ளிட்டோர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும், பூர்ணிமாவை சுற்றுப் போட்டு வனிதா விஜயகுமார் இருக்க, பூர்ணிமா மேலே பார்க்கும் போட்டோக்களும் வெளியாகி உள்ளன. எல்லா புகைப்படங்களும் ரொம்பவே பிளர்ராக இருப்பதை பார்த்த ரசிகர்கள் செம பார்ட்டி போல என கலாய்த்து வருகின்றனர்.

ஐஷுவா? பூர்ணிமாவா?: பிக் பாஸ் வீட்டை விட்டு பெரும் தொகையுடன் பூர்ணிமா வெளியேறியுள்ள நிலையில், பூர்ணிமாவுடன் தான் நிக்சன் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஐஷு இன்னொரு பக்கம் ஹார்ட்டீன் எல்லாம் போட்டு நிக்சனுக்காக காத்திருக்கும் நிலையில், அவருடன் இதுவரை நிக்சன் சந்திப்பு நடத்தியது போல எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











