நுரையீரல் பாதிப்பு.. அறுவை சிகிச்சையும் பலனளிக்கவில்லை.. திடீரென உயிரிழந்த சீரியல் நடிகை!
சென்னை: பிரபல சீரியல் நடிகை நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 37. இவரது மறைவு சின்னத்திரை நடிகர்களையும் அவரின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கன்னடி நடிகையான ரஷ்மி லீலா, பாப்பா பண்டு, தெலுங்கு ஜானகி, காவலுதாரி, கன்னடி, காவ்யாஞ்சலி, பாந்தவ்யா, ஆனந்த சாகர், ஹூக்லி பிட் சர், கோதுலி மற்றும் ககனா குசுமா உள்ளிட்ட பல பிரபலமான தொடர்களில் நடித்துள்ளார். இவர் சீரியலைத் தவிர, அவர் பிராணா, கிராம தேவதே, சிஹி முத்து மற்றும் கெம்டு தீபா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஷ்மி லீலாவின் கணவர் 'சரிக்கு மஞ்சு', கன்னட தொலைக்காட்சியில் எழுத்தாளர் மற்றும் வசன எழுத்தாளராக உள்ளார்.

நடிகை மறைவு: இந்நிலையில், நடிகை ரஷ்மி லீலாவின் கணவர் சரிக்கு மஞ்சு தனது இன்ஸ்டாகிராமில், ஒரு அதிர்ச்சியான பதிவினை ஷேர் செய்துள்ளார். அதில், என் மனைவி ரஷ்மி லீலா, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு 2019 ஆம் ஆண்டு முதல் நுரையீரல் ஃபைப்ரோஸிஸுடன் போராடி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக, அவர் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையில் இருந்தார். விரைவில் அவர் குணமடைந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில் அண்மையில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான சிகிச்சையில் இருந்தபோதிலும், அடுத்தடுத்த நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்தால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார் என்பதை வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

கண்ணீருடன் இரங்கல்: அவரின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 1:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணிக்கு பனசங்கரி மின்மயானத்தில் நடைபெறும் என்றும், அவரின் உடல் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கட உள்ளதாக கூறியுள்ளார். நடிகை ரஷ்மி லீலாவின் மறைவு சக நடிகர்களையும், அவரின் நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகை ரஷ்மி லீலாவை இழந்து வாடும் அவரது கணவருக்கு பலர் ஆறுதல் கூறி கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











