மூன்று முடிச்சு சீரியல் நடிகைக்கு கல்லீரல் புற்றுநோய்.. 2 நாளில் ஆப்ரேஷன்.. அவரே போட்ட பதிவு!
சென்னை: மூன்று முடிச்சு சீரியல் நடிகை கல்லீரல் புற்றுநோயால் போராடி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து பதறிப்போன நண்பர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, இந்த நோயில் இருந்து மீண்டு வர ஆறுதல் கூறி வருகின்றனர்.
பிரபல சீரியல் நடிகையான தீபிகா தனது நோய் குறித்து விரிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடுமையான வயிற்று வலி இருந்ததால், மருத்துவமனைக்கு சென்றேன். என்னை பரிசோதனை செய்த மருத்துவர், கல்லீரலில் "டென்னிஸ் பந்தின் அளவு" கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அந்தக் கட்டி புற்றுநோய் கட்டி என்றதும் நான் மிகவும் உடைந்து விட்டேன். தற்போது புற்றுநோய் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களாக நான், அனுபவித்த மிகவும் கடினமான காலங்களில் இதுவும் ஒன்று என பதிவிட்டு இருந்தார். இந்த அறிக்கையை பார்த்து அவரது நண்பர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். பலரும் இந்த நோயில் இருந்து விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இரண்டாம் கட்டபுற்றுநோய்: மேலும், நடிகை தீபிகாவின் கணவரும் தொலைக்காட்சி நடிகருமான ஷோயப், தனது மனைவியின் இந்த மோசமான நிலைகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், நோயறித்த போதிலும், தீபிகா நம்பிக்கையுடனும் மீள்தன்மையுடனும் இருக்கிறாள். இதை எதிர்கொண்டு தைரியமாக வெளியேற உறுதியாகவும் இருக்கிறாள். கடவுளின் ஆசிர்வாதத்தால், என் முழு குடும்பமும் அவள் பக்கம் நின்கிறது. அதே போல, ரசிகர்களின் அன்பும் பிரார்த்தனையும் அவளை வலிமைப்படுத்தும் என பதிவிட்டு இருந்தார். நடிகை தீபிகாவின் மற்றொரு தொலைக்காட்சி நடிகரான கௌரவ் கன்னா, வலிமையாக இரு தீபிகா, நாங்கள் அனைவரின் பிரார்த்தனை செய்கிறோம். நிச்சயம் இதில் இருந்து நீ மீண்டு விடுவாய். நீ புற்றுநோயை தோற்கடித்துவிட்டு மீண்டு வருவாய். ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதே என பதிவிட்டு இருந்தார்.
விரைவில் ஆப்ரேஷன்: தற்போது தீபிகாவிற்கு ஆப்ரேஷன் செய்ய இருந்த நிலையில், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், காய்ச்சல் குறைவதற்காக மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். இதனால், இந்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சையை ஒத்திவைத்துள்ளதாக அவரது கணவர் ஷோயப் தெரிவித்துள்ளார். மேலும், பித்தப்பையில் கல் இருப்பதால், தீபிகாவுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக ஷோயப் குறிப்பிட்டார். கட்டியை அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டு விட்டால், தீபிகா முழுமையாக குணமடைவார் என்று மருத்துவர்கள் உறுதியளித்திருப்பதாக தீபிகாவின் கணவர் தெரிவித்துள்ளார்.
மூன்று முடிச்சி சீரியல்: நடிகை தீபிகா சசுரல் சிமர் கா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் பிரபலமா இவர் தொடர்ந்து பல தொடர்களில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இவர், சில வருடங்களுக்கு முன்பு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மூன்று முடிச்சு என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான சீரியலில் நடித்திருந்தார். மூன்று முடிச்சு சீரியல் நடிகை என்றதும் சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியல் நடிகையான என அந்த சீரியல் பிரியர்கள் கவலை அடைந்தனர். அதன்பின் தான் அது இந்தி சீரியல் என்பது தெரிந்து நிம்மதி அடைந்தனர். இருப்பினும் எந்த மொழி நடிகையாக இருந்தால் என்ன நோயில் இருந்து தீபிகா குணமடைய வேண்டும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











