5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்!
நியூயார்க்: பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும் மாடலுமான கைலி ஜென்னரை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
1997 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் முன்னாள் ஒலிம்பிக் வெற்றியாளருமான கைய்ட்லின் ஜென்னருக்கு இளைய மகளாக பிறந்தவர் கைலி ஜென்னர்.

கிம் கர்தாஷியன் தொகுத்து வழங்கிய கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் கைலி. அதன் பிறகு வேறு சில தொலைக்காட்சி தொடரிலும், மாடலிங்கிலும் கலக்கி புகழ்பெற்றார். கைலி காஸ்மெடிக்ஸ் என்ற அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.
ட்ராவிஸ் ஸ்காட் என்ற அமெரிக்க ராப் பாடகரும் கைலி ஜென்னரும் காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்டார்மி என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது.
தற்போது தன்னுடைய 5 மாத குழந்தைக்கு காதுகுத்தி, நகை அணிந்திருக்கும் புகைப்படத்தை கைலி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஐந்து மாத குழதைக்கு இதை செய்யலாமா? அது பாதுகாப்பானது கிடையாது என கைலியை வறுத்தெடுக்கின்றனர்.
சிலர் நைஜீரிய மக்களிடையே குழந்தை பிறந்த இரண்டாம் நாளே காது குத்தும் பழக்கமிருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு பிறகு காது குத்துவது ஒன்றும் தவறில்லை. சிலர் கைலியை குறை கூற காரணம் தேடுகின்றனர். அவ்வளவுதான் என ஆதரவுக் குரல் கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











